பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வடுவூர் கே:துரைசாமி ஐயங்கார் ஒரு வழிப்போக்கன் என்னையா கூச்சல்? மகி பத்து ரூபாய் கொடுத்து என்னை விலைக்கு வாங்கிக் கொள்ளும். நான் உமக்கு அடிமையாய் இருந்து ஊழியம் செய் கிறேன். வழி: சரிதான் உனக்கு யார் சோறு போடுகிறது? எனக்கு வேண்டாம். (போப் விடுகிறான்) மகி அடாடா போய் விட்டானே! இன்னொரு முறை கூவிப் பார்க்கிறேன். (உரக்க) என்னை 10 ரூபாய்க்கு வாங்குவா ருண்டோ? என்னை அடிமையாக வாங்கிக் கொள்வார் உண்டோ? (தனக்குள் அடாடா ஒருவரும் வரவில்லயே ஆகா! அதிர்ஷ்ட ஹீனனே! எப்பொழுது மாதவராயர் தரித்திரரானாரோ அப் பொழுதே எல்லாருக்கும் தரித்திரம் வந்துவிட்டது. முண் ஏண்டா சொம்மா நிக்கிறே? எங்கிடா பணம்? வைடா கீளே (பிடித்துத் தள்ளுகிறங்கள்/ மகி: நான் நினைத்தவுடன் பணம் எங்கிருந்து வரும். பிர்ம்மா வாக இருந்தால் உடனே சிருஷ்டி செய்யலாம். (கீழே விழு கிறான். இருவரும் இவனை இழுத்துக் கொண்டு போகிறார்கள்/ மகி ஐயையோ அடிக்கிறார்களே! கொல்லுகிறார்களே! ஐயோ! கேள்வி முறை இல்லையா? இந்த நகரம் அதிகாரி இல்லாமல் பாழாய்ப் போய் விட்டதா? இந்த அக்கிரமத்தைத் தடுப்பவரில்லையா? (கமலேசன் வருகிறான்.) கமலே ' (தனக்குள்) இதென்னடா எயவாகீது இந்தச் சூதாடிப் பயவ ஏன் இங்கிட்டு நிக்கிறாங்க? சூதாடிப் பயவ ளுக்கு எசமான் முண்டனும் இன்னொருத்தனும் மகிபால்னை என்னாத்துக்கோ தெரியல்லே கீழே போட்டு இளுத்துக்கிட்டு வாராங்களே சூதுலே இருக்கிற இம்பம் எதுலே வருங்கிறேன்! அந்த இம்பம் கறி சோறு திங்கறத்தலே கூட வராதே; நான் முண்டன் ஊட்டுக்குப் போயி ஆட்டம் ஆடி எத்தினி நாளாச்சு! பணமில்லாமே எம் பெஞ்சாதியெப் பதினஞ்சி ரூவாக்கி வச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/52&oldid=887589" இலிருந்து மீள்விக்கப்பட்டது