பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 51 ஆடின. பொறவாலே நான் போகவே இல்லையே; என்னெக் கண்டாக்கா ஏன் வல்லென்னு முண்டன் கோவிச்சுக்கினா என்னா செய்றது? அவனே பாக்காமே மூஞ்சிலே துணியெப் போட்டு மூடிக்கினு இந்த வழியா போறேன். (தன் வஸ்திரத்தைப் பிரிக் கிறான்) ஆகாகா முளுக்கக் கந்தலால்ல இக்குது இதுலே எத்தினி கண்ணு! எத்தினி ஒட்டு! இதுவும் ஒரு மாதிரி அளவுதான்! இல்லே இல்லே! இந்தத் துணியோடே சோக்கைப் பாத்துப்புட்டு எம்புட்டுப் பேரு கண்ணெப் போட்டுட்டாங்கறேன். இதெல் லாம் அந்தக் கண்ணுங்க. இதெப் பிரிச்சுப் போட்டுக்கினா இன்னம் கண் போட்றுவாங்க. மடிச்சே வச்சுக்கறேன். (மடித்து வைத்துக் கொள்ளுகிறான்.) என்னே முண்டன் பார்த்தான் என்ன செஞ்சுடுவான்? போயிப் பார்க்கறேன். (வருகிறான்.) முண். எங்கேடா ரூவா? மகி எங்கிருந்து வரப்போகிறது? கமலே அடே முண்டா என்ன விசேசம்? சொகமா இக்கி றாயா? முண் : இந்தச் சமயத்துலே நீ எங்கிட்டுறா வந்தே? இந்தக் களுதே 10-ரூவா தரனும். ஏம்மாத்தராண்டா. கமலே அதுக்கா இம்புட்டு பெறமாதம்! முண் (கமலேசனுடைய அங்கவஸ்திரத்தைப் பிடிங்கிப் பிரித்து ஆகா! பலே பாருங்கையா ஆயிரம் கண்ணோடை யாளே! இந்த அளவானதுணியைப் போட்ட இந்த பெபுரவுக்கு 10-ரூவா பெரமாதம் இல்லையாம். - கமலே போடாமுட்டாளே! நான் எத்தினியோபத்து ரூபாயே ஒரு கண நேரத்துலே சூதாடித் தோத்திருப்பேண்டா முண்டே! மனிசன் பணத்தே என்னாத்துக்குடா மூட்டையாக் கட்டி வைக் கிறது? பணத்தைத் திங்க முடியுமாடா? கொலபாதவண்டா! நீ 10-ரூவாக்காவ இந்த மனிசனேப்போட்டு இப்புடித் தானாடா நசுக்கறது! ஒனக்கு நெஞ்சுலே எரக்கமில்லியடா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/53&oldid=887590" இலிருந்து மீள்விக்கப்பட்டது