பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் முண் : அடே! நீ பெரபு தாண்டா ஒன்னெத் தெரியுண்டா இதாண்டா வளி, நீ போய்த்து வாடா. கமலே அடே இவனெச் சொம்மாப் போட்டு ஒவித்திரம் பண்ணாதே! நான் ஒண்ணு சொல்றேன். அந்த மாதிரி கேளு! இன்னும் 10-ரூவா இவனுக்கு கடனாக்குடு. அதை வச்சு ஆடி ஒன் கடனைத் தீத்துடுவான். முண் எப்பிடிடா? கமலே இவன் கெலிச்சா நீ பணம் குடுக்க வாணாம். முண் தோத்தான்னா? கமலே அப்பவும் குடுக்க வாணாம். முண் புத்திசாலிடா நீ என்னே யாருன்னு பாத்துக்கிட்டே பொறந்தது மொத ஒன்னைப் போலே நான் எம்பிட்டுப் பேரெப் பார்த்தவனாச்சே! நான் அம்புட்டுப் பேரையும் ஏமாத்தரவ னாச்சே! அடே ரோக்கிதே இல்லாத பயலே! ஒங்கிட்ட @ 1 FF LIT நான் பயப்பட்டவன்? கமலே ஆர்றா ரோக்கிதே இல்லாதவன்? முண் நீதாண்டா? கமலே : ஒங்கப்பன், பாட்டன், முப்பாட்டன் இவிங்க தாண்டா ரோக்கித இல்லாதவிங்க. (ஒடிப் போகும்படி கமலேசன் மகிபாலனுக்குச் சைகை காட்டுகிறான்.) முண் : அடே களுதே! இனிமேலே பேசினின்னா பல்லு கில்லெல்லாம் ஒடஞ்சி போவும். ஆருன்னு பாத்துக்கிட்டே? அடே, மகிபாலா! எங்கிடா பணம்? வைடா கீளே! (இழுக்கிறான்.) மகி ஐயா! ஐயா! இன்றைக்குள் எப்படியாவது கொடுத்து விடுகிறேன். என்னை ஏன் இப்படிக் கொல்லுகிறாய்? இனி மேல் உபத்திரவித்தால் என் உயிர் போய்விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/54&oldid=887593" இலிருந்து மீள்விக்கப்பட்டது