பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 59 மயிலே பழித்த இயலே செழித்த மணியே இனித்த மடமானே மறையோர் குலத்தி லெழிலா ரொருத்தர் மனமீ திருத்தல் நிஜமாமே. அப்படியானால் தங்கள் மனதிற் குடிகொண்ட புண்ணிய வான் யாராவது பிராம்மணராய்த்தான் இருத்தல் வேண்டும். தாங்கள் சாதாரணமானவர்களின் மீது இச்சை கொள்வீர்களா? அவர்சகல விதமானகல்வியிலும் தேர்ச்சி பெற்றவரும் யெளவனப் பருவமுடையவருமான அந்தணராய்த் தான் இருக்க வேண்டும். ஆம், அதோ பாருங்கள்! உங்கள் முகத்தில் ஒருவிதப் புன்னகை உண்டாகிறதே! வஸ் (டிெ வர்னமெட்டு) - காம்போதி கயலே பழித்த விழியாய்! படித்த மறையோர் மணத்தல் கருதார்கள் அவரோ துதித்துப் பணிவோடிருத்த துருகான முற்று-மறிவோர்கள். பிராம்மணர்கள் வணங்கப்படுவதற்கு அருகரே ஒழியக் காதலிக்கப்படக் கூடியவர்கள் அல்லரே அதற்கென்ன செய்கிறது? மல்லி : அப்படியானால் அவர் வைசிய ஜாதியைச் சேர்ந்த வராக இருக்கலாமோ? அந்த ஜாதியாரிடத்திலேயே பொருள் குன்று குன்றாய்க் குவிந்திருப்பதால் அதுவும் ஒரு விதத்தில் நல்ல சம்பந்தந்தான். வஸ் அடி மல்லிகா ஏதேது? நீ என்னை விட மாட்டாய் போல் இருக்கிறது! ஒவ்வொரு ஜாதியாய்க் கேட்டுக் கொண்டே வருகிறாயே! கடைசியாக நல்ல வார்த்தை சொன்னாய்! வெட்கக் கேடு, வைசியனை யாராவது கணவனாய் அடைவார் களோ? திரை கடலோடியும் திரவியம் தேடு என்னும் பழமொழி அவர்களுக்காகச் சொல்லப்பட்டதல்லவோ? இரவிலும் பகலி லும் விழிப்பிலும் துயிலிலும், அவர்களால் வணங்கப்படும் கடவுள் பணமே. அவர்கள் மனிதரிடத்தில் சிறிதும் பிரியம் வைக்க மாட்டார்களே! அவர்கள் ஓயாமல் தூர தேசத்திற்குப் போவதிலும் கடைகளைக் கட்டியழுது கொண்டிருப்பதிலும் தம் ஆயுட் காலத்தைக் கழிப்பவர்கள் அல்லவோ. ஸ்திரீகளின் மனது குளிர அவர்கள் வாயில் இருந்து ஒரு அன்பான மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/61&oldid=887609" இலிருந்து மீள்விக்கப்பட்டது