பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் மகி கடன்காரனுக்காக பயந்து ஓடி வருகிறேன். வஸ அடி மல்லிகா கதவைத் தாளிட்டு விடு. மகி (தனக்குள்) ஆகா கடன்காரன் என்ற சொல்லைக் கேட்டவுடன் இவள் என்னைக் காட்டிலும் அதிகமாய்ப் பயப் படுகிறாளே! இதுவும் அதிர்ஷ்டந்தான் ஏராளமான செல்வ மும், நற்குணமும் பெற்ற இந்த ஸ்திரீ எனக்கு உதவி செய்யா மல் இருக்க மாட்டாள். பார்க்கலாம். (வீட்டிற்கு வெளியின் முண்டன், திண்டன் இருவரும் வருகிறார்கள்.) முண் அவன் எங்கிட்டுத்தான் போனான். அவனே உடப் போறதில்லை. நமக்காச்சு அவனுக்காச்சு பார்க்கலாம் ஒரு கையி. திண் அவனாவது இன்னமே ஆப்புடவாவது! அவன் என்ன சாகசீகம் சேஞ்சுப்புட்டுப் போய்த் தாங்கிறேன். முண் அவன் மூக்கே கீழே போட்டுத் தேச்சு மூஞ்சிலே மோடு பள்ளம் இல்லாமெ நெரவிப்புட்டேனே! இந்தாலே பாரு இன்னம் நெத்தம் சொட்டிக்கினே ஒடிக்கிறான். திண் நெத்தம் இந்த ஊட்டுக்குள்ளே போயிருக்குதுடா ஆப்புட்டுக்கிட்டாண்டா ஆளு. இந்த ஊட்டுக்குள்ளற ஒளிச்சிக் கினுக்கிறாண்டா திருடன். முண் கதவே இடிக்கலாண்டா! (உட்புறத்தில்/ மல்லி /மகிபாவனைப் பார்த்து) ஏனப்பா நீ எங்கிருந்து வருகிறாய்? நீ என்ன தொழில் செய்பவன்? நீ பயந்து ஓடி வந்த காரணமென்ன? என்னுடைய எஜமானி அம்மாளுக்குத் தெரி யும்படி சொல். மகி அம்மா என்னுடைய சொந்த தேசம் குஸ்ஸும புரம். நான் ஒரு ஏழையின் மகன். எனக்குக் கால் பிடிக்கும் தொழில் ஒன்றுதான் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/64&oldid=887615" இலிருந்து மீள்விக்கப்பட்டது