பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் உலோபிகளிடத்திலேயே பொருள் யாவும் நிறைந்திருப்பது உலக வழக்கம். சாக்கடைக் குழியில் தானே அருந்துவதற்கு அருகமற்ற ஜலம் உச்சி விளிம்பு வரையில் நிறைந்திருக்கும். மல்லி அவருடைய பெயரைத் தெரிவி. மகி. குளிர்ந்த முகத்தை உடையவராதலால் பூலோக சந்திர னென்று யாவரும் அவரை அழைக்கிறார்கள். அவர் பெயர் மாதவராயர். வஸ் (திடுக்கிட்டுத்தன் ஆசனத்தை விட்டெழுந்து/அடி! மல்லிகா இவருக்கு ஆசனம் கொண்டு வந்து போடு. ஐயா இது உம்முடைய வீடு; தயவு செய்து உட்கார்ந்து கொள்ளும். அடி மல்லிகா விசிறி கொண்டு வா அந்தச் சரீரத்தைத் தொட்டு வருடும் பாக்கியத்தை உடைய இவர் எவ்வளவோ தவம் செய் திருத்தல் வேண்டும் இவருடைய பாக்கியம் யாருக்குக் கிடைக் கும் விசிறியால் வீசு அபூர்வமாக வந்த நம்முடைய விருந்தினர் களைத்துப் போயிருக்கிறார். மகி ஆகா! மாதவராயருடைய பெயரைச் சொன்னதற்கு இவ்வளவு மரியாதையா! மெச்சினேன் சிரேஷ்டரே உலகில் உதித்தால் இப்படிப் புகழுடன் உதித்தல் வேண்டும். இல்லை யாயின் பிறக்காமல் இருப்பதே உத்தமம். நீர் ஒருவரே உயிருடன் இருப்பவர்; மற்றவர்கள் நடை பிணங்களே. தனிகர்களை அடுத்த நாய்க்கும் வண்டியேற்றம் கிடைப்பதைப் போல், அவரால் எனக்கும் இந்தப் பெருமையோ அம்மா தாங்கள் நிற்க வேண்டாம் உட்காருங்கள். வஸ் (உட்கார்ந்து/ உமக்குக் கடன் கொடுத்த பிரபுவின் பெயரென்ன? மகி பணம் இருந்ததினாலேயே எல்லாரும் பிரபுவாய் விடுவார்களா? எவனிடத்தில் குணத்தழகும், பிறரை எவ்விதம் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் உணர்வும் இருக்கின் றனவோ அவனே பிரபு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/66&oldid=887619" இலிருந்து மீள்விக்கப்பட்டது