பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 67 மகி அம்மணி எனக்கு மனைவி ஏது? பிள்ளை ஏது? ஒன்றுமில்லை நான் ஏகாங்கி. நீங்கள் செய்த இந்த உதவியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். ஈசுவரன் உங்களைக் காப் பாற்றுவான். உத்தரவு பெற்றுக் கொள்கிறேன். (போகிறான்) (வெளியில் வந்து தனக்குள்) ஆகா இந்தத் தொழில் எவ்வளவு மானக் கேட்டையும் துன்பத்தையும் கொடுத்தது. சே! இப்படித் திக்கில்லாமல் அலைவதை விடப் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பதே நல்லது. என்ன உலகம் நாணயமாய் வேலை செய்து இந்த ஒரு வயிற்றை வளர்ப்பதற்கு இந்த ஊரில் ஒரு வேலை அகப்படாமற் போய் விட்டதே இவ்வளவு திடமான சரீரத்தை வைத்துக் கொண்டு நான் பிச்சை எடுக்கப் போனால் எவன் ஒரு பிடி சோறு போடுவான் தடியை எடுத்து வந்து மண் டையை உடைத்து அனுப்புவான். நல்லது! நான் இப்பொழுது காஷாயம் முதலியவற்றைப் பெற்றுச் சந்நியாசியாகிறேன். அதைவிடக் குறைந்த மனக்கவலை உடைய நிலைமை பூமியில் வேறொன்றுமில்லை. ஆகையால் அப்படியே செய்கிறேன். (போகிறான்) இடம் : மாதவராயருடைய மாளிகை. காலம் மறு நாள் இரவு. குணசீலன் (தனக்குள்) ஏழையாய் இருந்த போதிலும் யோக்கியதையும் நற்குணமுடைய எஜமானரிடத்தில் சேவகம் செய்வதே வேலைக்காரர்களுக்குப் பரம சந்தோஷம். அகங்காரமும் கடுகடுப்பும் உள்ளவனும், பணத்தைத் தவிர மற்ற எவ்விதமான யோக்கியதையும் இல்லாத வனுமான தலைவனிடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் ஓயாத் துன்பம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. எதை மாற்றினாலும் மாற்றலாம். பிறவிக் குணத்தை எப்படி மாற்ற முடியும்? நாம் எவ்வளவுதான் முயன்றாலும் பட்டி மாடு வய லில் நுழைந்து பயிரைத் தின்பதையும், பிறனுடைய மனைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/69&oldid=887625" இலிருந்து மீள்விக்கப்பட்டது