பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் யின் பேரில் மனத்தை வைப்பவன், குடிப்பவன் முதலியோரின் குணத்தை மாற்ற யாரால் முடியும்? இப்பொழுது நேரம் எவ்வளவு இருக்கலாம், நடு இரவாய் விட்டதே! இன்னும் எஜமானர் திரும்பி வரவில்லையே! பாட்டுக் கச்சேரி இன்னும் முடியவில் லையோ? எனக்கோ நித்திரை வருகிறது; அவர் வருமுன்துங்கு வதும் தவறு. அதோ கதவு தட்டுகிற சப்தம் கேட்கிறது. வந்து விட்டார்கள். . (மாதவராயரும் ளேபரமேசனும் சம்பாவித்த வண்ணம் வருகிறார்கள்.) . மாத ஸோமேசா திலோத்தமா எவ்வளவு மாதுரியமாய்ப் பாடினாள் வீணையைப் போன்ற வாத்தியம் வேறு என்ன இருக்கிறது! ஆப்த நண்பர்களைப் போல, அது விசனத்தினால் வருந்தும் மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது! அதைத் தேவர்களின் வாத்தியம் என்பதற்குத் தடையேயில்லை. ஸோம சங்கீதத்தின் இன்பத்தில் பொழுது போனதே தெரியவில்லை ஆஹா எவ்வளவு நேரமாய் விட்டது சந்திரன் அஸ்தமனமாகப் போகிறதே! நாய்கள் கூடக் குலைக்காமல் நித்திரை செய்கின்றனவே! நீங்கள் இனிமேலும் தாமதிக்காமல் சயனித்துக் கொள்ளுங்கள் அதிகம் கண் விழித்தால் உங்கள் தேகத்திற்குக் கெடுதலாய் முடியும். மாத ஐயோ பாவம் நமக்காகக் குணசீலனும் நெடு நேர மாய் நித்திரை இல்லாமல் இருக்கிறான். (அன்போடு) அடே குணசீலா நேரமாகிறது; நீ போய்ப் படுத்துக் கொள் கதவுகளை ஜாக்கிரதையாகப் பார்த்து மூடித் தாளிட்டு விட்டுப் படுத்துக் கொள். குண ஸோமேசரே இந்த நகை மூட்டையைப் பகலெல் லாம் நான் வைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது உம்முடைய முறை. இதோ வாங்கிக் கொள்ளும். (கொடுக்கிறான்) லோமே நல்ல வேளையாய் இன்று பகல் ஜாக்கிரதை யாய்க் கழிந்தது. இந்த இரவு எப்படிக் கழியப் போகிறதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/70&oldid=887629" இலிருந்து மீள்விக்கப்பட்டது