பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 69 தெரியவில்லை. இந்த மங்களபுரத்தில் திருடர்கள் இல்லாமல் இருந்தால் இப்பொழுது எனக்கு இவ்வளவு கவலை இராது; நானும் நன்றாய்த் தூங்கலாம். இனி எனக்கு நித்திரை எங்கு வரப் போகிறது? போய்ப் படுத்துப் பார்க்கிறேன். மாத மித்திரா இது நம்பிக்கையின் பேரில் நம்மிடத்தில் வைக்கப்பட்டது. இது சொந்தக்காரரிடத்திற் போய்ச் சேரும் வரையில், இதை நாம் ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டும், பார்த்துக் கொள். (சயனித்துக் கொள்கிறார்) (தனக்குள் ஆகா! அந்த சங்கீதம் இன்னமும் என் காதில் சப்தித்துக் கொண்டிருக்கிறதே! எவ்வளவு இனிமை இரங்குகிறார்) (ளேபரமேசனும் வேறொரு பக்கத்திற் படுத்துத் துயிலும் பொழுது கனவு கண்டு உளறுகிறான்./ ஸோமே : (தனக்குள் ஆகா! என்ன பாட்டு நல்ல வீணை! திலோத்தமாவின் அழகே அழகு! திலோத்தமா! உன் தேகத்தில் உள்ள ஆபரணங்கள் பத்திரம் திருடன் திருடன் பிடியுங்கள் பிடியுங்கள் ஆகா!! ஓட முடியவில்லையே? கால் பூமியை விட்டுக் கிளம்பவில்லையே! (சற்று மெளனம்) (சசிமுகன் என்னும் திருடன் கையிற் கன்னக் கோலுடன் மெதுவாக மார்பினால் நகர்ந்துகொண்டு வருகிறான்.) (தனக்குள் மெதுவாக அப்பா தோட்டத்தின் சுவரைத் தாண்டி உள்ளே வந்து சேர்ந்தேன். (மேலே பார்த்து சரி. சந்திரன் அஸ்தமனமாகும் சமயத்தில் இருக்கிறது; இதுவும் அதிர்ஷ்டந் தான் சந்திரனும் திருடருக்கு அனுகூலமானவன்தான் என்னைப் போன்ற புண்ணியவான்களுக்கு இரவானது இருளைக் கொடுத்து உதவுவதைப் போல, ஒரு தாய் கூடத் தன் குழந்தைக்கு உதவி செய்ய மாட்டாள். தோட்டத்திற்குள் வந்தது ஒரு பெரிய காரியம் அல்ல. இனி இந்த மாளிகைக்குள் நுழைவதே அருமையான விஷயம். பிறர் தூங்கும் பொழுது ஜெயம் பெறுவதும், தந்திரத் தினால் பொருளை அபகரிப்பதுமான இந்த உத்தியோகத்தைக் கெட்ட தொழில் என்று ஜனங்கள் சொல்லுகிறார்களே முட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/71&oldid=887630" இலிருந்து மீள்விக்கப்பட்டது