பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் கிறார்கள். கண்களை இறுக மூடிக் க்ொள்கிறார்கள். உடம்பு சோர்ந்து கிடக்கிறது, கணுக்கள் எல்லாம் தளர்ந்திருக்கின்றன. (நெருப்புக் குச்சியைக் கிழித்து அவர்களின் முகத்திற்கு நேரில் பிடிக்கிறான்) பொய்த் தூக்கமாய் இருந்தால் வெளிச்சம் முகத்தில் பட்டவுடன் அதைப் பொறுக்கக் கூடாமையால், முகத்தில் சலனம் உண்டாகும். கண்களிலும் அசைவுண்டாகும். சரி. இவர்கள் நன்றாய் நித்திரை செய்கிறார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. எல்லாம் சரியாய் இருக் கிறது! இதென்ன தம்புரு, வீணை, புஸ்தகங்கள் முதலியவை இருக்கின்றனவே! இது தாசியின் வீடோ அல்லது பாடகன் வீடோ தெரியவில்லை. இதை ஒரு பிரபுவின் வீடென்று நினைத் தல்லவோ மதிமோசம் போய் இதற்குள் நுழைந்து விட்டேன். இல்லாவிட்டால் வேறு எங்கேயாயினும் போயிருப்பேனே! விடியா மூதேவிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படுவ தில்லை என்பதைப் போலாயிற்றே என்னுடைய பிழைப்பு. இது வாஸ்தவத்தில் ஏழ்மைத்தனமா? அல்லது வெளி வேஷமா அல்லது திருடனுக்காவது அரசனுக்காவது பயந்து தன் சொத்தை எல்லாம் ஒளித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லையே! பூமிக்குள் புதைத்து வைத்திருப்பானோ? இந்த மணிகளைக் கீழே உருட்டிப் பார்த்தால் மேடு புள்ளம் இருப்பதும், சமமாய் இருப்பதும் தெரியும். அதனால் பூமி வீடு கட்டப்பட்ட பிறகு தோண்டப் பட்டதா என்பது நன்றாய்த் தெரியும். (உருட்டுகிறான்) சீ. இவன் நித்திய தரித்திரன்! இங்கே ஒன்றும் அகப்படாது! இவ் வளவு வீண் பாடுதான். வேறு எங்கேயாவது போகிறேன். (போக ஆரம்பிக்கிறான்) ஸோமே (கனவு கண்டு தானே உளறுகிறான்) ஒ மாதவ ராயரே திருடர்கள் கன்னம் வைக்கிறார்கள் நகை மூட்டையைத் திருட வருகிறார்கள்! இதோ இந்த மூட்டையை நீரே வைத்துக் கொள்ளும். - சசிமுகன் : (திடுக்கிட்டு) உண்மையில் விழித்துக் கொண் டானோ? என்னைப் பார்த்து விட்டானோ? ஒன்றுந் தெரியவில் லையே! இது மாதவராயருடைய வீடா தான் மிகுந்த ஏழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/74&oldid=887634" இலிருந்து மீள்விக்கப்பட்டது