பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 75 சசி ! (தனக்குள்) இவள் யாரோ ஒரு ஸ்திரீயல்லவோ சே! இவளைக் குத்தக் கூடாது! என் வேலை முடிந்து விட்டது. மெது வாகப் போய் விடுகிறேன். (மறைந்து விடுகிறான்) கோமளா கூ! கூ! திருடன் திருடன் வாருங்கள் திருடன்! திருடன் ஒடுகிறான் ஒடுகிறான்! ബേi്മേ (திடுக்கிட்டு எழுந்து என்ன அது என்ன அது கோமளா ஏன் அப்படிக் கூச்சலிடுகிறாய்? கோமளா திருடன் திருடன் வாரும் வாரும்! ஸோமே. திருடனாவது இங்கு வருவதாவது என்னகனவோ? கோமளா இல்லையில்லை! இதோ பாரும் வாசற்கதவு திறந்திருக்கிறது! - மாதவ ஸோமேசா இதென்ன இங்கே இவ்வளவு கூச்சல்! ஸோமே : திருடன் வந்துவிட்டுப் போயிருக்கிறான்! மாத எப்படி உள்ளே வந்தான்? ஸோமே ; இதோ பாருங்கள் துவாரத்தை! மாத ஆகா! இந்தத் துளை எவ்வளவு அழகாய் இருக்கிறது! திருடன் மிகவும் சாமர்த்தியசாலியாய் இருக்கிறானே! ஸோமே! நல்ல இடம் பார்த்துத் திருட வந்தான் முட்டாள்! மாத இவன் இந்த ஊர்த் திருடனாய் இருக்க மாட்டான். இவன் அந்நிய தேசத்தான். இந்த வீட்டின் வெளித் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து நுழைந்திருக்கிறான். நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன் என்பது இந்த ஊரில் யாருக்குத்தான் தெரியாது! திருட்டிலும் அதிர்ஷ்டம் வேண்டும். நான் நல்ல ஸ்திதியில் இருந்த பொழுது இவன் திருட வந்திருக்கக் கூடாதா இவன் சிரமத்திற்கு ஏதாவது பொருள் கிடைத்திருக்குமே! இவன் தன் னுடைய நண்பரிடத்தில் என்னை இகழ்ந்தல்லவோ பேசுவான். 'இவ்வளவு இடம்பமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/77&oldid=887640" இலிருந்து மீள்விக்கப்பட்டது