பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 83 3. இரவே எனது நகர் - அதில் நித்திரையே படை யான் அரசன் 4. குறைவே திருட்டிலில்லை - கலை கற்றலுங் கண்ணையிழத்தலு மேன்? (தனக்குள்) என்னுடைய உத்தியோகமும் சந்திரனுடைய உத்தியோகத்தைப் போலவே இரவில் பிரகாசிப்பதும் பகலில் ஒளியை இழந்து ஒடுங்குவதுமாய் இருக்கிறது! இதனாலே தான் எனக்கு சசிமுகன் (சசி = சந்திரன்) என்று பெயர் கொடுத்தார் களோ நான் இந்த மேன்மையான உத்தியோகத்தைச் செய்வேன் என்று நான் பிறந்த பொழுதே எப்படி அறிந்து கொண்டார் களோ தெரியவில்லை. என்னுடைய காரியம் சோம்பலே நிறைந்த இரவை அவமானப்படுத்தி, நித்திரா தேவியைத் தோற்கடித்து, ஏமாந்த காவலை ஏளனம் செய்கிறதல்லவா! ஆனால் நான் ஒரு வருக்கும் தெரியாமல் எவ்வளவோ சாமர்த்தியமாய் இந்தக் காரி யத்தை முடித்த போதிலும், என் செய்கைகளை எல்லாம் பார்த்த வண்ணம், என்னுடன் தொடர்ந்தும் நடந்தும் ஒடியும் வருபவ னும், எல்லாத் திருட்டையும் தன் கண்ணால் காண்பவனும், எவ ராலும் ஏமாற்ற முடியாத அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தனான கடவுளை நினைக்க, என் அச்சம் அதிகரிக்கிறது. என் மனதே இது குற்றம் இதுகுற்றமென்று நீதி போதனை செய்த வண்ணம் இருக்கிறது, என்ன செய்வேன்? என் மனதில் முற்றிலும் குடி கொண்ட அந்த யெளவன மங்கையின் பொருட்டல்லவோ நான் இப்படி இரவைப் பகலாக்கி, எவ்வளவோ தந்திரம் செய்ய வேண்டியிருக்கிறது. இதுதான் வஸந்தஸேனையின் மாளிகை. மல்லிகா எங்கிருப்பாளோ தெரியவில்லையே! தன்யாசி-ரூபகம் ப. எவ்விடங் காண்பேனோ? என் ரதியை எத்தின மடைவேனோ? அ. செவ்விய மேனியள், ஜெகத்திலிணையே இல்லாள் ஒவ்வொரு நொடிவளர் சுந்தரவல்லியை (எவ்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/85&oldid=887657" இலிருந்து மீள்விக்கப்பட்டது