பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ச. 1 நொடியுக மானது; நோயெனைத் தீய்த்தது; வடிவழகியை யடை நற்றினம் வருமோ? (எவ்) 2 இப்பெரு நிதியினுக் கிந்திர லோகமும் ஒப்புயர் வாகுமோ? உரைத்திடப் பெறுமோ? (எவ்) (கையில் ஒரு விசிறியுடன் மல்லிகர வருகிறாள்) ஆகா! அதோ வந்து விட்டாள் என் சுந்தரி அவளை அரை rணம் காணாவிட்டால் என் மனம் படும் பாட்டை என்ன என்று சொல்வேன்? என் உயிரே துடித்துப் போகிறது. ஜூரமடித்த உடம்பில் சந்தனக் குழம்பைப் பூசினால் அது எவ்வளவு இன்ப மாய் இருக்குமோ, அப்படி அல்லவோ இருக்கிறது! நெருப்பைப் போல எரிந்து தகிக்கும் என் மனத்தைக் குளிரச் செய்ய அதோ வந்துவிட்டாள் என் இரதி மல்லிகா சரியான பெயர்தான் மல்லிகைப் புஷ்பம் எப்படித் தன் வாசனையினால் மனிதரைப் பரவசப்படுத்துகிறதோ அவ்விதமே இவள் என் பஞ்சேந்திரி யங்களுக்கும் பிரும்மானந்தம் ஊட்டுகிறாள். (மெதுவாக அடி மல்லிகா! மல்லி யார் அது ஒகோ சசிமுகரா வாரும் வாரும் இவ் வளவு விடியற் காலத்தில் எங்கிருந்து வருகிறீர்? என்ன விசேஷம்? சசி /புன்முறுவலோடு) - கண்ணே எல்லாவற்றையும் தெரிவிக்கிறேன். சமீபத்தில் வா! மல்லி உஸ் கூச்சலிடாமல் பேசும். என் எஜமானி அம்மாள் காதில் விழப் போகிறது. வஸந்த (மேன் மாடிவில் தனக்குள் என்ன மல்லிகா விசிறி எடுத்துக் கொண்டு வரப் போனவள் இன்னம் வரவில் லையே! எங்கு போயிருப்பாள் (ஜன்னலின் வழியாகக் கீழே பார்க்கிறாள்) என்ன ஆச்சரியம்! யாரோ ஒரு புருஷனோடு பேசிக் கொண்டிருக்கிறாளே! ஒருவருக்கு ஒருவர் மிகவும் பிரிய மாய்ப் பேசுவதாகத் தெரிகிறது! இதற்கு முன் பழகி அறிந்தவர் களைப் போலக் காணப்படுகிறது! சே! அவளை அவன் முத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/86&oldid=887659" இலிருந்து மீள்விக்கப்பட்டது