பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் பொன்னொரு பொருட்டோ? தீமை புரியினும் பெரியதாமோ? நின்னரு வேட்கை நாடி லெவ்வினை முடிக்க கில்லேன். பொருள் இல்லாமலா கேட்பேன்? அருமையான ஒரு வஸ்துவைப் பெற விரும்பினால் எவ்விதமான ஹீனத் தொழில் செய்தாயினும் அதற்குத் தேவையான திரவியத்தை சம்பாதித் தல் வேண்டாமா? உன் பேரில் நான் கொண்டிருக்கும் மோகம் இலேசானதா? அக்கிரமக் காரியம் செய்து பணம் சம்பாதித் தேன். அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? வஸ் : இவன் பார்வைக்கு நல்ல மனிதனாய் இருக்கிறானே! என்ன அக்கிரமக் காரியம் செய்திருப்பான்? மல்லி விருத்தம்: சஹானா ஐயனே! நன்றே சொன்னி ஏறிவினர்க் குரிய தாமோ? மெய்யென நாடி யற்ப வின்பநீர் விரும்பி முற்றும் பொய்யனாய்க் குலத்தின் மேன்மை புகலருங்கலையின் ஞானம் வெய்யனாய் விலக்கித் தீய வியற்றிடல் தகுதியாகுமோ? ஒரு rணத்தில் ஒழியும் அற்ப சுகத்தை உத்தேசித்து நீர் அருமையான இரண்டு பொருட்களுக்கு ஆபத்தைத் தேடிக் கொண்டிரே! சசி இரண்டு பொருள்கள் எவை? மல்லி : உம்முடைய தேகம் ஒன்று. பெயர் ஒன்று. சசி ; நீ பெரிய முட்டாள். இந்த காலத்தில் துணிந்து செய்ப வருக்குத்தான் அதிர்ஷ்டம் உண்டாகிறது! அது உனக்கென்ன தெரியும்? - மல்லி (ஏளனமாய்/நீர் செய்தது கொஞ்சமும் குற்றம் இல் லாத காரியம்! என்பேரில் உமக்கு இருக்கும் காதலினால் நீர் இந்த அக்கிரமம் செய்தீர். ஆகையால் இது அக்கிரமமாகாது; மிகவும் நீதியான விஷயம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/88&oldid=887663" இலிருந்து மீள்விக்கப்பட்டது