பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 87 சசி அடி தங்கமே கோபித்துக் கொள்ளாதே! இந்த நகை களை நான் ஒரு வீட்டில் இருந்து அபகரித்துக் கொண்டு வந்தேன். மல்லி (வள்ளி சரித்திரம்: 'நெஞ்சையடைக்குதே நான் என்ன செய்குவேன் - நஞ்சை கொடுத்தாயோடி’ என்ற பாட் டின் மெட்டு.) அடானா - சாப்பு நல்ல வினை செய்தீர்! ஐயா! இனி இங்கு நில்லாமல் ஏகுவீர். புல்லிய தீயவர் செய்திடும் காரியமல்லாவோ போம் போம் நீர். சசி என்ன மொழி சொன்னாய்? எங்ங்னஞ் செய்குவேன்! கன்னியர் மாமணியே நின்னையடைத்திட இவ்வினை செய்தேன் சொன்னது நீதி யன்றே? மல் : எந்தப் பிறப்பினு மேலென வோதிடும் அந்தணர் செய்வினையோ? இந்தக் குணமுடையாரை விரும்பிடேன் வந்தவழி இதுவே சசி சுந்தரியே எனதாருயிர் நீ யெனை நிந்தித்தலோ முறையே? சொந்த மனைவி யென நின்னை நாடினேன் கோபம் விடுவிப்பாயே. அக்கிரமம் செய்தாலும் நான் நன்றாய் யோசித்துத் தான் செய்வேன். நான் ஸ்திரீகள் குழந்தைகள் முதலியோரிடத்தில் இருந்து திருடவில்லை. தானதருமங்களுக்காகச் சேகரம் செய்து வைக்கப்பட்டிருந்த பொருளைக் களவாடவில்லை. விலைக்கு விற்று விடும் பொருட்டுக் குழந்தைகளைத் திருடிக் கொண்டு வந்து விடவில்லை. இதோ நான் கொணர்ந்திருக்கும் ஆபரணங் களை உன் எஜமானியிடம் கொடுத்து உன்னை விடுவித்துக் கொண்டு வந்துவிடு. ஆனால் இவற்றை எப்பொழுதும் பெட்டிக் குள் ஜாக்கிரதையாக மறைத்து வைத்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/89&oldid=887665" இலிருந்து மீள்விக்கப்பட்டது