பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் - 89 மனிதர்களில் எத்தனை பேரைக் கொன்றீர், உண்மையைச் சொல்லும். சசி நான் ஒருவரையும் தொடக் கூடவில்லை. மல்லி : உண்மைதானா சசி நிச்சயம்! சத்தியம் உன் தலையில் அடிக்கிறேன். வஸ் ஆகா! உயிர் வந்தது. சசி அடி மல்லிகா நீ என்ன இந்த விஷயத்தில் இவ்வளவு கவலையைக் காட்டுகிறாய்! உன் பேரில் வைத்த ஆசையினால் அல்லவோ, எவ்வளவோ உயர்ந்த பரிசுத்தமான குலத்தில் உதித்த நான் இதைச் செய்தேன். அடிமை நிலையில் இருந்து உன்னை விலக்கி, ஆயுட் காலம் எல்லாம் சுதந்திரத்தையும், என் மனப் பூர்வமான பிரியத்தையும் உனக்குக் கொடுத்ததற்கு, என்னை நீ ஏளனம் செய்வதும், வேறொருவனைப் பற்றி நீ கவலைப்படு வதும் பதில் உபகாரமோ? புஷ்பிக்கும் பாலிய காலமாகிய உன்னத மரமானது வீணிற் பழங்களைச் சுமந்து, வேசைகளாகிய பறவைகளுக்கு அல்லவோ அவற்றை இரை ஆக்குகின்றது! செல்வமும் புருஷத்வமும் இன்னம் நாம் விசேஷமாய் மதிப் பன யாவும், அடக்க முடியாத காமாக்கியினால் நாசம் அடை கின்றன. ஆகா! எப்பொழுதும் சலனப்படும் குணமுடைய ஸ்திரீ களிடத்திலும், எப்பொழுதும் மாறும் நமது அதிர்ஷ்டத்திலும் நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் எவ்வளவு மடையர்கள்! ஏழை களை ஸ்திரீகளும் அலட்சியம் செய்வதாய் இருந்தால், அவர்கள் பேரில் பிரியம் வைப்பதை விட நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் நாயின் பேரில் அந்த அன்பை வைத்தால், அது எவ்வளவோ நன்றியுடையதாய் இருக்கும் முதலில் அவர்களே நம் மீதில் ஆசையைக் காட்டினால், அவர்கள் அவ்விதம் இருக் கும் வரையில் நாமும் பிரியத்தைக் காட்டிப் பிறகு பேசாமல் விட்டு விடுவது நல்ல காரியம் ஸ்திரீகள் பணத்தின் பொருட்டு, நினைத்தால் அழுவார்கள்; நினைத்தால் சிரிப்பார்கள்; தம்மால் விரும்பப்படாதவனாய் இருந்தாலும், இவர்கள் தமது பாசாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/91&oldid=887671" இலிருந்து மீள்விக்கப்பட்டது