பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் கினால், அவனுடைய நம்பிக்கையை உண்டாக்கிக் கொள்வார்கள். ஆகையால், நற்குலத்தில் உதித்த யோக்கியதை உடைய யெளவன புருஷர், ஸ்மசானத்தில் உண்டாகும் புஷ்பங்களைப் போல ஏராளமாகக் காணப்படும் பரத்தையரின் வலையிற் படாமல் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சமுத்திரத்தின் அலைகள் கூட ஸ்திரீகளின் பிரியத்தைக் காட்டிலும் சிறிது நேரம் நிலைத் தவையாய் இருக்கும். மாலை நேரத்தில் வானத்தில் உண்டாகி மாறும் நிறங்கள் கூடச் சற்று உறுதியானவை என்று நினைக்க லாம். பணமே அவர்களுடைய நோக்கம்; பணமே அவர்களுடைய ஆகாரம், பானம், இன்பம் முதலியன. ஆனால் ஒருவனுடைய செல்வம் ஒழிந்து போய்விட்டால், அவனை உடனே ஒட்டி விட வேண்டியதே காரியம்! அதுவே அவர்களுடைய குல தருமம். மின்னலின் ஒளி தோன்றி மறைதலைப் போன்றது அவர்க ளுடைய மோகம். மனதில் ஒருவன்மீது ஆசையை வைத்துக் கொண்டு, வேறொருவனிடத்தில், தான் அவனுக்கே தன்னை அர்ப்பணம் செய்து விட்டதாய்ப் பாசாங்கு செய்வார்கள். ஒரு வனை ஆசையுடன் ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கையில் வேறொருவனை நினைத்துப் பெருமூச்சு விடுவார்கள். தானாகக் கனியாததைத் தடியால் அடித்தால் கனியப் போகிறதா? இயற்கையிலேயே இல்லாதன்த விரும்பினால் அது எப்படிக் கிடைக்கும்? கற்பாறையின் மீது தாமரைப் புஷ்பம் எப்படி உண்டாகும்? அல்லது குதிரையின் பாரத்தைக் கழுதை சுமக் குமோ? வரகு தானியத்திற்குள் அரிசி எப்படி உண்டாகும்? ஸ்திரீகளின் மனதில் ஏதாவது ஒரு நற்குணம் இருக்குமோ என்று எவ்வளவு சோதனை செய்தாலும் உள்ளே இருப்பது குதிரைக் கொம்புதான். அந்த துஷ்டன் மாதவராயனையா நீ விரும்புகிறாய்? இந்த சங்கதி முன்னால் தெரிந்திருந்தால், அவனை ஒரே குத்தில் கொன்று விட்டு வந்திருப்பேனே! இப்பொழுதே போய் அவன் உயிரை வாங்கி விட்டு வருகிறேன். (புறப்படு கிறான்) மல்லி : (அவனைப் பிடித்துக் கொண்டு) என்ன பிரமாத மாக உளறுகிறீரே! தலை கால் தெரியாமல் ஏன் இப்படிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/92&oldid=887675" இலிருந்து மீள்விக்கப்பட்டது