பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 91 கோபித்துக் கொள்ளுகிறீர்? உயர் குலத்திற் பிறந்த பிராமணராய் இருந்தும், திருடினேன் என்றும் குத்துகிறேன் என்றும் சொல்லு கிறதற்கு வெட்கமில்லையா? (முகத்தில் இடிக்கிறாள்) சசி ; எல்லாம் யார் பொருட்டு? உனக்காகத்தானே! நான் உனக்காக இவ்வளவு தாழ்வடைவதையும் நீ நினைக்காமல் மாதவராயனுக்குப் பரிந்து பேசுகிறாயே! மல்லி ; உண்மை அதுவல்ல. இந்த ஆபரணங்கள் என்னு டைய எஜமானி அம்மாளுக்கு சொந்தமானவை. சசி என்ன ஆச்சரியம் உன் எஜமானியின் நகைகள் அங்கு போனதின் காரணமென்ன! மல்லி : ஒரு நாளிரவு திருட்டுக்குப் பயந்து, மாதவராய ரிடத்தில் வைத்து விட்டு வந்தார்கள். சசி அப்படியா! உன்னுடைய எஜமானியின் நகைகளா இவைகள் ஆகா! தெரியாமலல்லவோ திருடி விட்டேன்! என்ன செய்வேன்? வஸ (தனக்குள்) எவ்வளவோ கெட்டவனாய் இருந்தா லும் இவனிடத்திற் கழிவிரக்கங்கூட இருக்கிறதே. சே மோகம் பொல்லாதது! அதனால் எவ்வளவு நற்குணமுடையவன் கூட, என்னென்ன தீய காரியங்களைச் செய்ய நேருகிறது! மோகத்தி னால் நான் படும் பாட்டில் இருந்தே இவனுடைய நிலைமை எப்படி இருக்கும் என்பது நன்றாய்த் தெரிகிறது ஐயோ பாவம்! என்ன செய்வான்! சசி அடி என் பிரிய மல்லிகா இப்பொழுது நான் என்ன செய்கிறது? - மல்லி அது உமக்குத்தான் தெரிய வேண்டும். சசி : அப்படி அல்ல! ஸ்திரீகளுக்கு இயற்கை சுபாவமே குரு. கல்வி மதங்கொண்ட புருஷர் புஸ்தகங்களில் இருந்து விஷ யங்களைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். அப்படித் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/93&oldid=887677" இலிருந்து மீள்விக்கப்பட்டது