பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (வளிவந்தளேயனையிடம் போப்/ அம்மணி! மாதவராயரிட மிருந்து ஒரு பிராம்மணர் வந்திருக்கிறார். வஸ் (புன்சிரிப்புடன்) அப்படியா: சீக்கிரம் மேலே அழைத்து வா. (மல்லிகா திரும்பிப் போப் பிராம்மணனை அழைத்து வருகிறாள்.) வஸ் : சுவாமி! நமஸ்காரம் வரவேண்டும். சசி ; ஸுகீபவா மங்களானி பவந்து வஸ் : சுவாமி இப்படித் தயவு செய்யுங்கள். இந்த ஆசனத் தில் உட்கார வேண்டும். சசி இல்லை, இல்லை. நான் அவசரமாய்ப் போக வேண் டும். மாதவராயர் இந்த ஆபரண மூட்டையைத் தன் மாளிகை யில் வைத்திருப்பது ஜாக்கிரதைக் குறைவென்றும், இதனால் தான் பெரிதும் கவலைப்படுவதாயும் தெரிவித்து இதை உங்க ளிடம் கொடுக்கச் சொன்னார். (மல்லிகாவினரிடம் கொடுத்து விட்டுப் போகிறான்.) வஸ் சுவாமி தயவு செய்து கொஞ்சம் இருக்க வேண்டும். ஒரு வேண்டுகோள். இவற்றை அனுப்பிய பிரபுவுக்கு நான் ஒரு வஸ்துவைக் கொடுக்கிறேன், சிரமத்தை மன்னித்து அதை ஏற்றுக் கொண்டு போக வேண்டும். சசி ! (தனக்குள் நானாவது இனி அவரிடம் போகிறதாவது நான் எங்கே கொண்டு போகப் போகிறேன் (வெளிப்படை யாக) என்ன வஸ்து அது? வஸ் மல்லிகா! மல்லி ஏன் அம்மணி! வஸ் உன்னைக் கூப்பிடவில்லை? இவர் கேட்டதற்குப் பதில் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/96&oldid=887684" இலிருந்து மீள்விக்கப்பட்டது