பக்கம்:வசந்த மல்லிகா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

வஸந்தமல்லிகா

யில் விழுந்தாள். அதன் பிறகு நடந்ததொன்றையும் அவள் அறியவில்லை. பிறகு அவள் மூர்ச்சை தெளியப் பெற்று விழித்துக் கொண்ட போது அந்த வீட்டிற்குள் ஒரு விசிப்பலகையின் மேல் தான் படுத்திருந்ததையும், ஒர் அழகிய யெளவன ஸ்திரீயும், 40, 45 வயதான ஒரு மனிதனும் தன்னைக் தெளிவிக்கும் பொருட்டு தனக்கு பற்பல உபசரணைகள் புரிந்ததையுங் கண்டாள். அந்தப் புருஷன், "அம்மா கிருஷ்ணவேணி! ஜலப்பாத்திரத்தை வாயில் வை. கொஞ்சம் தண்ணீர் குடிப்பாளானால் உடனே மயக்கம் தெளிந்து போம்" என்றான்.

அவள் அவ்வாறே செய்துவிட்டு மல்லிகாவைப் பார்த்து, "ஏனம்மா இப்போது உடம்பு எப்படி இருக்கிறது? குணமாயிருக்கிறதா?" என்றாள்.

மல்லிகா மருண்டு மருண்டு விழித்து நான்கு திக்குகளையும் அவர்களையும் நோக்கி, "நான் எங்கே இருக்கிறேன்? உயிரோடிருக்கிறேனா?” என்றாள்.

அவளிடத்தில் நிரம்பவும் இரக்கத்தைக் காண்பித்தவண்ணம் கிருஷ்ணவேணி, "இல்லை இல்லை. நீ களைப்பினால் மூர்ச்சித்திருந்தாய். இப்போது கொஞ்சம் தெளிவடைந்து விட்டாய். நாங்கள் உன்னுடைய நண்பர்களே, பயப்பட வேண்டாம்” என்று சொல்லி அவளை எடுத்துத் தனது மார்பில் சார்த்திக் கொண்டாள். அதுகாறும் பார்த்தறியாத அன்னியர்கள் அவ்வளவு அன்பாக தனக்கு உபசரணைகள் புரிந்ததைக் கண்ட மல்லிகா அடக்கவொனா நன்றியறிதலைத் தனது கண்ணிர்ப் பெருக்கால் வெளியிட்டாள்.

அவ்வாறு கால்நாழிகை நேரம் கழிந்தபிறகு, மல்லிகா தனது சுயநிலைமையை அடைந்தாள். தான் பவானியம்மாள்புரத்தில் எவ்வித மாறுபாடுமில்லாமல் ஒரேவிதமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த நாட்களையும், அப்போதிருந்த தனது மாறுபட்ட நிலைமையையும், தானடைந்த துன்பங்களையும் நினைத்தாள். ஒரு நாளும் கண்டறியாத பிற மனிதருக்கிடையில் தான் தற்செயலாக வர நேர்ந்ததையெண்ணி வெட்கினாள். அவளது முகவாட்டத்தைக் கண்ட கிருஷ்ணவேணி, "அம்மா! இங்கே வந்ததைப் பற்றி நீ ஏதோ மனோவேதனைப் படுகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/108&oldid=1231410" இலிருந்து மீள்விக்கப்பட்டது