உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

வஸந்தமல்லிகா

என்னவிதமான தீர்மானத்தைச் செய்யக் கூடும்? அவள் ஒன்றை யுமறியாது சஞ்சலமடைந்திருந்த சமயத்தில், கிருஷ்ணவேணி புன்னகை தவழ்ந்த முகத்தோடு அவளிடம் வந்து, "அம்மா மல்லிகா! நீ நிரம்பவும் அலுத்திருந்தாயே! இதற்குள், அவசரப்பட்டு ஏன் எழுந்தாய்? இன்னம் கொஞ்ச நேரம் படுத்திருந்தால் உடம்பு சரியான நிலைமைக்கு வந்துவிடுமே?" என்றாள். மல்லிகா, "அப்படியொன்றுமில்லை. உடம்பு சரியாய்த்தானிருக்கிறது. பொழுது விடிந்து நிரம்ப நேமாகி விட்டதாகையால், படுக்கையில் இருக்கப் பிடிக்கவில்லை. எழுந்துவிட்டேன்" என்றாள்.

"அப்படியானால் சரி; வா! முகத்தை சுத்தி செய்து கொள். காபி, சிற்றுண்டி முதலியவை தயாராக இருக்கின்றன. கொஞ்சம் சாப்பிடலாம் என்று சொல்லி, மல்லிகாவை அழைத்துக் கொண்டு போய் அவளுக்கு உபசரணை செய்து, அவளை உண்பித்த பிறகு, அவர்கள் இருவரும் கூடத்திற்கு வந்தார்கள். அவ்விடத்தில் அடுத்த நாடகத்திற்குத் தேவையான ஊர்வசி முதலியோரின் இறகுகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றிற்கு வர்ணம் வைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணவேணியின் தகப்பன், அவர்களைக் கண்டவுடன், "அம்மா மல்லிகா! உடம்பு எப்படி இருக்கிறது?" என்று அன்பாக விசாரிக்க, அவள் சிறிது நாணத்தோடு, “சரியாகவே இருக்கிறது. இவ்வளவு அன்பான மனிதர்களிடத்தில் என்னைக் கொண்டு வந்து விட்டது அந்தக் கடவுளேயன்றி வேறில்லை" என்றாள். அப்போது கிருஷ்ணவேணி அங்கே கிடந்த இறகுகளில் ஒன்றை எடுத்து அதற்கு வர்ணம் பூச ஆரம்பித்தாள். அவள் அதை முடிக்கும் வரையில் அதைக் கவனமாக பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா, தானும் அவர்களுக்கு உதவி செய்வதாகத் தெரிவித்தாள். கிருஷ்ணவேணி அவளுக்கு அதுபோகம் போதாதென்றும், வர்ணங்களைக் கைகளிலும், உடைகளிலும் பூசிக்கொள்வா ளென்றும், ஆகையால் அந்த வேலை செய்ய வேண்டாமென்றும் மறுத்துக் கூறினாள். என்றாலும், மல்லிகா தானும் முயன்று பார்ப்பதாகச் சொல்லி, ஓர் இறகை எடுத்து வைத்துக்கொண்டு வர்ணம் பூச ஆரம்பித்தாள். அவள் அந்த வேலை செய்ய அன்றே ஆரம்பித்தாளாயினும், பல வருஷங்கள் பழகினவளைப்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/112&oldid=1231931" இலிருந்து மீள்விக்கப்பட்டது