இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்திரசபா
99
"அப்பா! தொலைந்தான்! மல்லிகா! வா போகலாம். என்ன உன்னுடைய முகம் ஒருவிதமாக மாறுபட்டு விட்டதே?” என்றாள் கிருஷ்ணவேணி.
"என் முகம் மாறியா இருக்கிறது?" என்றாள் மல்லிகா.
"ஆம்; முற்றிலும் மாறிவிட்டது. இவனை இதற்கு முன் உனக்குத் தெரியுமா?" என்றாள் கிருஷ்ணவேணி.
"இவனை நேற்றுதான் பார்த்தேன். எனக்கு இவனைத் தெரியாது. இவனைக் கண்டவுடன் நேற்றைய விஷயங்கள் நினைவுக்கு வந்தன; வேறொன்றுமில்லை" என்று சொல்ல, இருவரும் சம்பாவித்துக்கொண்டே தமது ஜாகையை நோக்கி நடந்தார்கள்.