உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13-வது அதிகாரம்

மல்லிகாவின் பிணம்

தான் எந்தக் காரியத்தையாகிலும் செய்வதாக ஒப்புக் கொண்டால், அதை உடனே செய்து முடிப்பது நிச்சயமென்று தன்னைப் பற்றி ஸகாராம் ராவிடத்தில் புகழ்ந்து பேசும் குணமுடைய பீமராவின் சாமர்த்தியம் ஒரு நாளில் வெட்ட வெளிச்சமானது. மல்லிகாவைத் தான் எப்படியாகிலும் கண்டு பிடிப்பதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்ட அவன் வம்புலாஞ்சோலை, கோவில்கள், குளங்கள், சத்திரம், சாவடிகள், போஜன சாலைகள் முதலிய சகலமான இடங்களிலும் தேடி, அவளைக் காணமாட்டாதவனாய் வருந்திய வண்ணம் தமயந்தி பாயிக்கு வண்டி அமர்த்தி அவளையனுப்பிவிட்டு, கீழ்க்கோட்டை சாவலிலுள்ள டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்து அருகிலிருந்த இன்ஸ்பெக்டர் மாணிக்க வாசக நாடாரைக் கண்டான். அவர் மிகுந்த மனோதிடமும் தேகபலமும் பொருந்தியவர் என்பது அவரது சலனமற்ற முகத்திலிருந்தும், கேதத்தின் உருத்தி திரட்சி முதலியவற்றிலிருந்தும் வெளியானது. பீமராவ் அவரிடம் போய், "ஐயா! என் தங்கையைக் காணோம். அவளைத் தேடிக்கொண்டு வந்தேன்" என்றான். அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் உள்ளே போய், ஒரு நமூனாவை (அச்சு பாரத்தை) எடுத்து வந்து, அதில், காணாமற் போனவரின் அங்க அடையாளங்கள் வயது முதலிய விவரங்களை எழுதிக் கொடுக்கும்படிக் கூற, அவன் அதிலிருந்த கேள்விகளுக்கெல்லாம் விடையெழுதி கையெழுத்துச் செய்து கொடுத்தான். அதை அலட்சியமாக ஏற இறங்கப் பார்த்த இன்ஸ்பெக்டர், அதட்டிய குரலில் "537" என்ற ஓர் எண்ணைக் கூப்பிட, உடனே ஒரு போலீஸ் சேவகன் பிரஸ்ன்னமாகி, "என்ன எஜமாங்களே!" என்று அவருக்கெதிரில் அடங்கியொடுங்கி, இராமர் பட்டாபிஷேகப் படத்தில் ஆஞ்சநேயர் நிற்பதைப்போல நின்றான். அவனோடு பேசாமலே அவர் அந்தக் காகிதத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/118&oldid=1231942" இலிருந்து மீள்விக்கப்பட்டது