உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

வஸந்தமல்லிகா

வகையில் மாறுதலடைந்து மிக்க விகாரமாக இருந்தது. அதைக் காண சகியாதவராய், அவர் உடனே சால்வையால் முகத்தை மூடிவிட்டு தமது தலையில் கைகளால் மோதிக்கொண்டு பிரலாபித்து சிறிது நேரம் புலம்பியழுத பிறகு அவ்விடத்தை விட்டெழுந்து வெளியில் வந்து, தாம் மெய்ம்மறந்திருப்பதாயும், தம்மை வண்டியில் வைத்து வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்படியாயும் சைகை செய்துவிட்டுச் சோர்ந்து படியின்மேல் உட்கார்ந்துகொண்டார். உடனே ஸகாராம் ஒரு வண்டியமர்த்த, இருவரும் அதில் ஏறிக்கொண்டு வஸந்தராயரது மாளிகைக்குச் சென்றனர். அங்கு போய் தமது கட்டிலில் படுத்த வஸந்தராவ் மூன்று நாட்களுக்குப் பிறகே தமது கண்களைத் திறந்தார். தேகத்தில் கடுமையான ஜூரம் உண்டாயிருந்தது. அவர் எழுந்திருக்கவும் சக்தியற்றவரானார்; ஆகாரம் நித்திரை முதலியவற்றை முற்றிலும் துறந்தார்; தமது உடம்பிலும் உயிரிலும் வெறுப்புக் கொண்டவராய்த் தத்தளித்துக் கிடந்தார்; அவ்வித நிலைமையில் பல வாரங்கள் படுத்த படுக்கையாயிருந்து இளைத்துத் துரும்பாக மெலிந்து போனார்; மல்லிகாவை நினைத்து நினைத்து உருகினார்; தம்மைப் பிறர் தூக்கி வைக்கும் நிலைமையை அடைந்தார். சர்வாதிகாரி, திறமை வாய்ந்த ஒரு வைத்தியனைக் கொண்டு அவரைச் செளக்கியப்படுத்த, தன்னால் இயன்ற வரையில் முயன்றான். ஆனால், அவர் தம்மை விட்டுப் பிரிந்து போன மல்லிகாவிடம் தாமும் போய்ச் சேர்ந்தாலன்றி தனது மனப்பிணி நீங்காதென்றும், தாம் உயிரை விட்டு விட வேண்டுமென்றும் நினைத்து அவர் தமது தேகத்தைச் சிறிதும் கவனியாமல் விட்டு விட்டாராயினும், அவனின்றி ஒரணுவும் அசையாதென்பதற்கு இணங்க, இந்த உடம்பை நமது இச்சைப்படி ஆக்கவும், அழிக்கவும் எவராலும் ஆகாது. ஆகையால், அவரது பிணி அதிகரித்ததேயன்றி அவரது உயிர் நீங்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல சிறிது எழுந்து நடக்கும் நிலைமைக்கு அவர் வந்தார். என்றாலும், அவர் இன்னாரென்று எவரும் அடையாளங் கண்டு கொள்ளக் கூடாவிதமாக மெலிவடைந்து ஒரு கிழவனைப் போலானார்.

தமது ஆருயிர்க் காதலியிருந்த இடத்தில் தாம் இனி இருந்தால் தமது விசனம் ஒரு நாளும் குறையாதென்று நினைத்து எங்கேயாகிலும், அறிமுகமற்ற புதிய இடத்திற்குப் போய் விட வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டார்; தமது சர்வாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/124&oldid=1231969" இலிருந்து மீள்விக்கப்பட்டது