பக்கம்:வசந்த மல்லிகா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிணமும் பித்தரும்

107

காரியை அழைத்து மாளிகை, பங்களா, ஜெமீன், கிராமங்கள் முதலியவற்றை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறி, அவரிடம் யாவற்றையும் ஒப்புவித்தார்.

தாம் சென்னப் பட்டணம் போய் அங்கு சொற்பகாலமிருந்து பார்க்கலாமென்று யோசனை செய்து கொண்டவராய் அவர் அவ்விடத்திற்குப் போகப் புறப்பட்ட சமயத்தில், துக்கோஜிராவ், அவரைப் பார்க்க வந்திருப்பதாக வேலைக்காரன் தெரிவிக்க, அவனை உள்ளே அழைத்து வரும்படி மறுமொழி சொல்லி அனுப்பினார். அடுத்த நிமிஷத்தில் துக்கோஜிராவ் உள்ளே வந்து நின்றான்.

வஸ : துக்கோஜி! என்ன விசேஷம்? வந்த காரியமென்ன? என்றார்.

துக்கோ : வேறு எதற்காக வரப்போகிறேன்? அந்தப் பெண் விஷயமாகத்தான் வந்தேன். யாதொரு துர்நடத்தையையும் அறியாத அந்தப் பெண்ணின் விஷயத்தில் தாங்கள் இப்படிச் செய்யலாமா? அவள் உலகத்தையே அறியாத பேதையல்லவா! - என்றான்.

வஸ : இந்த விஷயத்தில் என்னைக் கண்டிக்க வந்தாயோ? நீங்கள் அவளை நடத்திய அருமை எனக்கு நன்றாகத் தெரியும்; போய்விட்டு வா; எனக்கெதிரில் நிற்க வேண்டாம் - என்று கடுமையாக மொழிந்தார்.

துக்கோ : ஆயிரமிருந்தாலும், நீங்கள் இப்படி அவளுக்கு மானஹானி உண்டாகக் கூடிய காரியத்தில் பிரவேசித்திருக்கக் கூடாது.

வஸ : (கோபத்தோடு) ஆயிரமிருந்தாலும், பதினாயிரமாகாது! போ ஐயா போ! உன்னை யார் இங்கே வரச் சொன்னது? மரியாதையாக வெளியில் போய்விடு. இல்லாவிட்டால் வேலைக்காரன் வெளியில் போக வழி காட்டுவான் - என்றார்.

அதைக்கேட்டதுக்கோஜிராவ் பெரிதும் வெட்கி அவமானம் அடைந்து மறுமொழி ஒன்றும் சொல்ல மாட்டாமல் வெளியிற் போய்விட்டான். அன்றிரவே வஸந்தராவ் புறப்பட்டு சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/125&oldid=1231990" இலிருந்து மீள்விக்கப்பட்டது