பக்கம்:வசந்த மல்லிகா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

வஸந்தமல்லிகா

"என்னுடைய அக்காள் ஒருநாளும் அப்படி அகம்பாவம் கொள்பவள் அல்ல. இன்னொரு முறை அப்படிச் சொல்ல வேண்டாம்" என்று மல்லிகா அலட்சியமாகவும், கண்டிப்பாகவும் மறு மொழி சொல்லிவிட்டு அருவருப்போடு அப்புறம் திரும்பிக் கொண்டாள். அவள் தன்னை அவ்வாறு அவமதித்ததனால் வருந்திய மனத்தோடு தமயந்தி உட்புறம் சென்றாள்.

சற்று நேரத்தில் கோவிந்தசாமி ராவ் ஒத்திகையை ஆரம்பித்தார். அன்றைய தினம் ஒத்திகையைப் பார்க்கும் பொருட்டு அரண்மனையிலிருந்து நூற்றுக் கணக்கில் பெண்டீர் வந்து உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

நாடகம் ஆரம்பமாயிற்று. ஒவ்வொருவரும் தத்தம் வேஷத்திற்குரிய விதம் அதிக திறமையைக் காட்டி நடித்தனர். தமயந்தி கந்தருவ ஸ்திரியைப்போல் இறகுகளோடும், மற்ற நேர்த்தியான ஆடையாபரணங்களோடும், நேத்திராநந்தமாக, ஆகாயத்திலிருந்து விடப்பட்டிருந்த கம்பிகளின் வழியாக கீழே இறங்கினாள். அவள் கம்பியைப் பிடித்துக் கொண்டு வந்ததைப் போல் காட்டாமல், அந்தரத்தில் பறந்து வந்தவள்போல அழகாய் வந்தாள். அவள் வந்த அற்புதமான காட்சியைக் கண்ட பெண்டீர் யாவரும் அதிசயித்துக் கைகொட்டி ஆர்ப்பரித்துத் தத்தம் சந்தோஷத்தை வெளியிட்டனர். அவள் பூமியில் இறங்கி சிறிது நேரம் பேசிய பிறகு திரும்பவும் கம்பியைப் பிடித்துக் கொண்டு மேலே ஏற முயன்றாள். பூமிக்கும், மேலே திரைகட்டியிருந்த மூங்கில் பரணிற்கும் உள்ள உயரம் 15 அடிக்கு மேலிருந்தது. பரணிற்கு சமீபத்திற் போய் திரையில் ஜாலரில் மறைந்த தமயந்தி அகம்பாவத்தினாலும் இறுமாப்பினாலும் தன்னை மறந்தவளாய்ச் சிறிது தனது கைப்பிடியை விட்டு விட்டாள். உடனே அவள் ஆகாயத்திலிருந்து வீரிட்ட சப்தத்துடன் பூமியில் வந்து விழுந்தாள். உடம்பில் பட்ட அடியால் எலும்புகள் நொறுங்க, வாயில் இரத்தம் ஓடி வந்தது. அதைக் கண்ட எல்லோரும் திக்பிரமை கொண்டு பயந்து, அலறி ஓடிவந்து அவளை வளைத்துக் கொண்டனர். அதனால் அங்கு பெருத்த குழப்பமுண்டாயிற்று. கோவிந்தசாமிராவ் ஓடோடியும் வந்து தமயந்தியைத் தூக்கியெடுத்தவராய் அந்த நாடகசாலையின் உட்புறத்தைக் கடந்து அதன் வாசலிற் கொணர்ந்து தெருவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/128&oldid=1232048" இலிருந்து மீள்விக்கப்பட்டது