உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

வஸந்தமல்லிகா

பெட்டி வண்டி கொண்டு வருகிறேன். திருவையாற்றில் ஆற்றின் ஒரத்தில் எனக்கு ஒரு மெத்தை வீடு இருக்கிறது. அதில் ஸுகமாக இறங்கி ஒரு நாள் இருந்துவிட்டு வரலாம்" என்றான் பீமராவ்.

"நீ எப்போதும் தாராள மனதுடையவன் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், உன் பொழுதை வீணாக்க எனக்கு மனமில்லை" என்றான் கிழவன். பீமராவ் சிரித்துக் கொண்டு, "எனக்கு என்ன தாசில் உத்தியோகமா? ஒரு நாளில் 24 மணி நேரமும் எனக்கு ஒழிவுதான். அதை எப்படிக் கழிப்பதென்பதை அறியாமல் நான் அவஸ்தைப் படுகிறேன். புண்ணிய ஸ்தலத்திற்குப் போவதிலா நம்முடைய காலம் வீணாய்ப் போகும்? அதைப் பற்றிக் கவலை வேண்டாம். நாம் அவசியம் போக வேண்டும். நான் அன்று வண்டியோடு தவறாமல் வந்து சேருவேன். நீங்கள் மூவரும் தயாராக இருக்க வேண்டும்” என்றான்.

"கிருஷ்ணவேணி கூட திருவையாற்றுக்குப் போக வேண்டும் என்று பல தடவைகளில் ஆசையோடு சொல்லியிருக்கிறாள். ஆகையால், இதைக் கேட்டவுடன் அவள் நிரம்பவும் சந்தோஷமடைவாள். ஆனால், ஸஞ்சலாட்சியின் குணம் வேறு மாதிரியானது. அவள் அதிகமாக சந்தோஷப்படுவதுமில்லை. வீணாகப் பேசுவதுமில்லை. அவளுக்கு விளையாட்டுகளில் விருப்பமேயில்லை. ஆகையால், அவள் வருவதுதான் சந்தேகம்" என்றான் கிழவன்.

"அவள் வந்தால் நீங்கள் போவதாயும், வராவிட்டால் பிரயாணத்தை நிறுத்தி விடுவதாயும் தெரிவித்தால், அவள் அவசியம் வருவாள்" என்று சொல்லியவண்ணம் பீமராவ் புறப்பட்டு அரண்மனைத் தோட்டத்திற்குப் போய், இரண்டு ஸ்திரீகளையும் அழைத்துக் கொண்டு திரும்பவும் கருந்தட்டான்குடிக்கு வந்து சேர்ந்தான். அப்போது சாதாரணமான இரண்டொரு வார்த்தைகளைத் தவிர, அதிகமாக எதையும் அவன் பேசவில்லை.

கடைமுக தினத்தன்று காலை ஆறுமணிக்கு கிருஷ்ணவேணியின் வீட்டு வாசலில் ஒரு பெட்டி வண்டி வந்து நின்றது. பீமராவ் வண்டியை விட்டிறங்கி, அவர்கள் யாவரும் மெத்தையின் மேல் இருந்ததையறிந்து, அங்கு விரைவாகச் சென்றான். முதலில் மல்லிகா எதிர்ப்பட்டாள். அவளை நோக்கி, "புறப்படவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/142&oldid=1232174" இலிருந்து மீள்விக்கப்பட்டது