உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

வஸந்தமல்லிகா

அவ்விடத்துக்குச் செய்தி சொல்லியனுப்பு, நேரமாகிறது. நான் போய்விட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வசந்தராவ் எழுந்து தமது ஜாகைக்குப் போய்விட்டார். தமயந்தியோடு அவர் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது, அவரது மனதில் மல்லிகாவின் நினைவு வந்து விட்டது. அவரது உருவமே அன்று முழுவதும் அவரது மனதை விட்டகலாமல் குடிகொண்டிருந்தமையாள, அவர் அன்று போஜனத்திற்கும் எழுந்திருக்காமல் தியானமாகப் படுத்திருந்தார். தமது பிரிய சுந்தரி இறந்த பின், தாம் இந்த உலகிலிருப்பதில் ஒரு பலனுமில்லை என்று நினைத்து நினைத்து அவர் வருந்தி உலக விஷயத்தில் முற்றிலும் வெறுப்பை அடைந்தார். ஆகாரம் நித்திரை முதலியவற்றை அலட்சியம் செய்தார். அவ்விதம் நாலைந்து நாட்கள் கழிய, அவரது தேகம் நிரம்பவும் தளர்ச்சி அடைந்தது. அவர் ஒரு துரும்பாக மெலிந்து போனார். அந்த நிலைமையில் கடற்கரைக்குப் போக வேண்டும் என்ற நினைவு அவருக்கு உண்டாக, அவரு மெல்ல எழுந்து நடந்து கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்; மணலின் மீது சிறிது நேரம் நடந்தார். ஆகாரம் நித்திரை முதலியவை இல்லாமையால் கண்கள் இருந்தன; காது அடைத்தது; சிரம் சுழன்றது. அவர் மயங்கி அப்படியே பட்டையின் ஓரத்தில் வீழ்ந்து மூர்ச்சித்தார். அப்போது அருகில் வந்து கொண்டிருந்த ஒருவன் அதைக் கண்டு பயந்து கூச்சலிட்டான்; வழக்கப்படி குதிரை வண்டியில் வந்த தமயந்தி அவ்விடத்தில் உண்டான கூக்குரலைக் கேட்டு, அந்தப் பக்கத்தில் உற்று நோக்கினாள். வசந்தராவ் விழுந்து கிடந்ததைக் கண்டு பதைபதைத்தவளாய் வண்டியை விட்டிறங்கி ஓடி வந்தாள். வண்டிக்காரனும் ஆவலுடன் கூடவே தொடர்ந்து வந்தான்.

"அடடா! இவருக்கு என்ன துன்பமோ தெரியவில்லையே! மெதுவாகக் தூக்கி வண்டியில் வையுங்கள்" என்று தமயந்தி சொல்ல, வண்டிக்காரனும், அங்கு முதலில் கூச்சலிட்டவனும் அவரைத் தூக்கி வண்டியில் விட்டனர். அவளும் அருகில் உட்கார்ந்து கொண்டு வண்டியைத் தங்கசாலைத் தெரு 1501-ம் இலக்கமுள்ள வீட்டிற்கு ஓட்டச் சொல்ல, 15-நிமிஷத்தில் வண்டி அங்கு போயிற்று. அங்கிருந்த வேலைக்காரர்களின் உதவியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/156&oldid=1233811" இலிருந்து மீள்விக்கப்பட்டது