தமயந்தியும் வஸந்தராவும்
139
தமயந்தி அவரை வீட்டிற்குள் கொண்டு போய் அவரது படுக்கையில் விட்டு உடனே ஒரு வைத்தியனைத் தருவித்தாள்.
வைத்தியன் அவரது கையைப் பிடித்து பார்த்துவிட்டு, "அடடா! கையில் நாய்டுயே இல்லையே! பிழைத்தால் மறுஜென்மந்தான்!" என்றான்.அதைக் கேட்ட எல்லோரும் எல்லோரும் பெரிதும் திகிலடைந்தனர். "இருக்கட்டும், நாம் முயன்று பார்க்கலாம். நான் பொய் இரண்டு விதமான மருந்து அனுப்புகிறேன். ஒன்றை ஒரு மணி நேரத்துக்கு ஒரு துளியாக வீட்டுக் கொண்டிருக்க வேண்டும். இன்னொன்று தைலம்; அதை இவருடைய மார்பில் விட்டு தேய்த்துச் சூடாக்க வேண்டும். அதையே செய்து, கொண்டிருங்கள் நான் சாயங்காலம் வந்து பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போய் மருந்துகளை அனுப்பினான். அவன் கூறியபடி தமயந்தி மருந்துகளை பிரயோகம் செய்து கொண்டிருந்தாள். அங்கிருந்து அவரது வேலைக்காரர்கள் அனைவரும் பெரிதும் வியாககுலமடைந்தவர்களாய் தமயந்தியின் சொற்படி செய்து கொண்டிருந்தார்கள். வைத்தியன் திரும்பவும் மாலையில் வந்து கையைப் பிடித்து பார்த்து, "இப்போது கொஞ்சம் நாடி அடித்துக் கொள்ளுகிறது. உயிரிருக்கிறது. ஆனால், இன்றிரவு முழுதும் யாரவது இவருக்கருகில் விழித்திருந்து இதே மருந்துகளை பிரயோகம் செய்ய வேண்டும்" என்று சொல்லிவிட்டுப் போனான்.
தமயந்தி அவரை விட்டகலாமல் ஆந்திராவு முழுதும் அவருக்கருகில் இருந்து மருந்துகளை பிரயோகம் செய்து கொண்டிருந்தாள். விடியற்காலம் மூன்று மணிக்கு அவர் வாயைத் திறந்து, "மல்லிகா! மல்லிகா! என்னை விட்டுப் போய்விட்டாயே! மல்லிகா! நானும் வருகிறேன். என்னையும் உன்னிடத்தில் அழைத்துக் கொள்!" என்று ஓயாமல் பிதற்ற ஆரம்பித்தார்; தமயந்தி நிரம்பவும் ஸஞ்சலமடைந்தவளாய் அதைக் கேட்டுக்கொண்டே அருகில் இருந்தாள். மல்லிகா யாராயிருக்கலாம் என்ற சந்தேகம் அவளது மனதில் தோன்றியது. அவள் அவரது காதலியாயிருக்கலாமோ என்று தமயந்தி நினைத்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் சிறிதளவு பாலை அவரது வாயில் ஊற்றினார்கள். அதில் மிகவும் சொற்பமே உள்ளே சென்றது. அவ்விதம் ரெண்டு