142
வஸந்தமல்லிகா
தம : தாங்களே பல தடவைகளில் சொன்னீர்களே. என்னை இப்படித் தவிக்கவிட்டுப் போய்விட்டாயே! என்னை இப்படி வஞ்சிக்கலாமா! என்று பலவாறு பிதற்றினீர்களே.
வஸ : அப்படியா!
தம : ஆம். அதிலிருந்துதான், அவள் தங்களுடைய ஆதரவிலிருந்து தங்களை வஞ்சித்து ஓடி விட்டதாக நினைத்தேன்.
வஸ : அடடா! இவளைப் பற்றி அப்படி நினைக்காதே! இவள் இறந்து போய் விட்டாள். அதனால் எனக்கு இப்படிப்பட்ட விசனம் ஏற்பட்டது. அதைத்தான் நான் அப்படிச் சொன்னேனேயன்றி, அவள் உயிருடனிருக்கையில் என்னை வஞ்சிக்கவில்லை.
தம : அவள் இறந்து விட்டாளா? மறுபடியும் தங்களுக்கு மனக்குழப்பம் உண்டாயிருக்கிறதால் தங்களுக்கு தஞ்சாவூரிலிருந்து கடிதம் கூட்டிவரவில்லையே. இவள் இறந்து போய் விட்டாள் என்பது எப்படித் தெரிந்தது?
வஸ : கடிதம் எதற்கு? நான் தஞ்சாவூரை விட்டுப் புறப்பட்டு இந்த ஊருக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாக இவள் இறந்து போய் விட்டாளே.
தம : என்ன ஆச்சரியம்! தாங்கள் இந்த ஊருக்கு வந்த பிறகு இவளை நான் பார்த்தேனே! இவள் இறந்து போகவதாது!
வஸ : நீ வேறு யாரைப் பற்றியோ சொல்லுகிறாய்? இவளுடைய பிரேதத்தை நான் கண்ணால் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். நீ புதிய சங்கதியாகக் சொல்லுகிறாயே! இவள் இன்னாளென்பது உனக்கு எப்படித் தெரியும்?
தம : இந்தப்படத்தில் இருக்கிறவள்தானே மல்லிகா?
வஸ : ஆம்.
தம : அப்படியானால் இவள் நிச்சயமாக உயிருடன் இருக்கிறாள். இவள் தங்களை வஞ்சித்து விட்டாளென்பது நிஜம் என்றாள்.
அதைக் கேட்ட வஸந்தராவின் மனம் பெரிதும் குழப்பமடைந்தது. ஒன்றுக்கொன்று மாறுபாடான பலவித எண்ணங்கள்