உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மல்லிகாவின் புதிய கணவன்

145

பக்கங்களிலும் பரவியது. கடைசியாக, சதாரம் என்னும் நாடகம் தயாராகி வந்தது. ஒரு நாட் காலையில் மல்லிகாவும் கிருஷ்ணவேணியும் தமது வீட்டில் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்த போது, அந்த ஊரில் வெளியாகி வந்த ஜனாநுகூலன் என்னும் பத்திரிகையைக் கிழவன் படித்துக் கொண்டிருந்தான்.

கிழவன் : மல்லிகா! இதோ பார்; இந்தப் பத்திரிகையில் உன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது - என்று சொல்லிய வண்ணம் பத்திரிகையை நீட்ட, கிருஷ்ணவேணி ஆவலோடு எழுந்து பாய்ந்து அதை வாங்கி, அடியில் வருமாறு அதிலிருந்து படித்தாள். "அரண்மனையின் இராஜப் பெருமாட்டிகளுக்காக நாடகம் நடைபெறும் கொட்டகையில் சில தினங்களில் பட்டாபிஷேகம் நடக்கப் போவதாகக் கேள்விப்படுகிறோம். இடை நடுவில் "சதாரம்" என்னும் ஒரு நாடகத்தை நடிக்கப் போகிறார்களாம்; எல்லோராலும் கொண்டாடப்பட்ட ஸஞ்சலாட்சி, அதில் சதாரமாக வந்து, இதுவரையில் எவரும் நடிக்காவிதம் நிரம்பவும் அற்புதமாக நடிக்கப் போகிறாளென்று கேள்விப்படுகிறோம். நாடகம் முடிவடைவதைப் பற்றியும், ஸஞ்சலாட்சி முதலியோரை இனிப் பார்க்க முடியாமல் போவது பற்றியும் அரண்மனை ஜனங்கள் பெரிதும் வருந்துகிறார்கள்."

கிரு : யார் இதை எழுதியிருப்பார்கள் என்பது தெரிகிறதா? பீமராவ்தான் எழுதியிருக்க வேண்டும். வேறு யார் இவ்வளவு சிரத்தையாக எழுதப் போகிறார்கள்? என்று சொல்லிக் கொண்டே அதற்கடுத்தாற்போலிருந்த சங்கதியை தனது மனதிற்குள்ளாகவே படித்தாள். "ஆகா! வஸந்தராவ் கூடவா! பலே! வேடிக்கைதான்" என்றாள். அந்தப் பெயரைக் கேட்டவுடன் மல்லிகா திடுக்கிட்டு, "என்ன அது? வாசி கேட்கலாம்" என்றாள். கிருஷ்ணவேணி அடியில் வருமாறு படித்தாள். "சென்னையிலிருந்து ஒருவர் தெரிவிக்கிறார் :- பவானியம்மாள்புரத்தின் புதிய ஜெமீந்தார் வஸந்தராவ் ஏதோ பிணியினால் திடீரென்று சென்னைக்கு வந்தவர், படிப்படியாக நிரம்பவும் இளைத்து உருமாறிப் போனார். அந்த நிலைமையில் அவர் கடற்கரைக்கு வந்து கொண்டிருக்கையில் சோர்ந்து கீழே விழுந்து மூர்ச்சித்தார். அந்தச் சமயத்தில் அங்கே வந்த ஒரு யௌவன ஸ்திரீ அவரைத் தனது வண்டியில் வைத்து வீட்டிற்கு அழைத்துப் போய்

வ.ம. - 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/163&oldid=1233826" இலிருந்து மீள்விக்கப்பட்டது