உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

வஸந்தமல்லிகா

ஸஞ்சலமடைந்திருந்ததை அவன் உணர்ந்தான். "நான் போகு முன் உன்னிடத்தில் உண்மையைத் தெரிவித்து விட்டுப் போகிறேன். உன் மேல் நான் கொண்ட காதலை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று என்னால் கூடியவரையில் முயன்றேன். அது பலிக்கவில்லை. இந்த வேதனையை ஒரு க்ஷணமும் என்னால் பொறுக்க முடியவில்லை. இந்த வேதனையை மறப்பதாக உனக்கு வாக்குறுதி செய்து கொடுத்தேன். ஆனால், இந்த ஆசைப் பேய் என்னைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டது. இந்த ஊரை விட்டுப் போனால் ஒரு வேளை அது மாறுமோ என்று பார்க்கத் தீர்மானித்திருக்கிறேன். அதன் பிறகு திரும்பி வந்து உன்னிடத்தில் சாதாரணப் பழக்கமுள்ளவனைப் போல நடந்து கொள்ளுகிறேன். நீ இங்கே க்ஷேமமாய் இருக்க வேண்டும் என்று ஈசுவரனை நான் ஸதாகாலமும் தியானித்துக் கொண்டிருப்பேன். போய் வரலாமா?" என்று கூறிய வண்ணம் நடக்க ஆரம்பித்தான்.

நிரம்பவும் தயாள குணமுடைய மல்லிகா, அவனது பரிதாபமான நிலைமையைக் கண்டு பெரிதும் இரக்கம் கொண்டு, "இப்படி வாருங்கள்; போகலாம்" என்று தடுமாறிய குரலில் அவனை அழைத்தாள்.

பீம : ஏன் என்னைக் கூப்பிடுகிறாய்? நீ கூப்பிடுவதால், என் மனசில் திரும்பவும் ஏதோ ஒரு வித நம்பிக்கை உண்டாக்குகிறாய். அதனால் மேலும் துன்பமே அல்லாது, நான் கடைத்தேற மார்க்கமில்லை - என்று கூறினான். அப்போது அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதைக் கண்ட மல்லிகா முற்றிலும் ஸஞ்சலம் அடைந்து, "சற்று பொறுங்கள், போகலாம்" என்றாள். அவளது உதடுகளும் அங்கங்களும் தென்றலில் அசையும் மாந்தளிரைப்போல நடுங்கின.

பீம : வீணாக என்னை அதிகமான விசனக் கடலில் ஆழ்த்தி வதைப்பதானால் கூப்பிட வேண்டாம்; என் எண்ணத்தைப் பூர்த்தி செய்வதானால் கூப்பிடு - என்று சொல்லிக்கொண்டே அவளிடம் நெருங்கினான்.

மல்லி : நின்று நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் என் மேல் ஆசை வைத்திருப்பதாகவும், உங்களைக் கலியாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/166&oldid=1233829" இலிருந்து மீள்விக்கப்பட்டது