உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

வஸந்தமல்லிகா

விருப்பத்திற்கு விரோதமாகச் சொல்லி விட்டாள்; அதைக் கேட்ட பீமராவ் அளவற்ற ஆநந்தம் கொண்டவனாய் மெய்ம்மறந்து போனான்.

அவள் அவ்வாறு சொன்னது கனவோ நினைவோ என்று அவன் சந்தேகித்தான்; அவளைக் கண்ணேயென்றும் முத்தேயென்றும் உயிரேயென்றும் தெய்வமேயென்றும் பலவாறு தோத்திரம் செய்தான். அவ்வாறு அரை நாழிகை நேரம் அவன் கரை கடந்த சந்தோஷத்தினால் பிதற்றியிருந்த பின், தான் அவசரமாய் வெளியில் போய்விட்டு வருவதாகச் சொல்லி அவளிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியிற் சென்றான்.

சென்றவன் தனது மனோரதம் நிறைவேறியதை நினைத்து நினைத்துப் பூரிப்படைந்தவனாய்த் தன்னை முற்றிலும் மறந்து நடந்தான். தனது தந்திரத்தினாலும், பொறுமையினாலும் இரண்டு கோடி ரூபாயும், ஜெமீனும், அழகிற் சிறந்த பவளக் கொடி போன்ற ஒரு பெண்மணியும் வரப் போவதை எண்ணி ஆநந்த சாகரத்தில் மிதந்து நடந்தான்.

தான் அவளை மணப்பதற்கு முன் அதற்குத் தேவையான பணத்தைச் சேகரஞ் செய்ய நினைத்து கலியாணபுரம் ஜெமீந்தார் வீட்டிற்குச் சென்றான். அங்கு அவனும் கோனூர் மிட்டாதாரும் வழக்கம் போல பணம் வைத்து ரங்குபாலா என்னும் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.

பீமராவைக் கண்டவுடன் கலியாணபுரம் ஜெமீந்தாரான மோகனராவ், "பீமா! எங்கே இரண்டு மூன்று நாட்களாக உன்னைக் காணோம்? நீ இல்லாமல் பொழுதே போகவில்லையே. வா; ஓர் ஆட்டம் போடலாம்" என்று சொல்லி அவனுடன் சூதாட ஆரம்பித்தார். அன்றிரவு 12 - மணி நேரம் வரையில் அவ்விரண்டு பிரபுக்களும் அவனுடன் சூதாடி, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைத் தோற்றனர். பீமராவ் அவற்றை எடுத்துக் கொண்டு குதூகலமாகத் தனது வீடு போய்ச் சேர்ந்தான்.

மறுநாட் காலையில் கலியாணபுரம் ஜெமீந்தார் ஸகாராம் ராவின் வீட்டிற்கு வந்தார். ஒரு நாளும் வராத பெரிய மனிதர் அன்று தனது வீட்டுக்கு வந்ததைக் கண்ட ஸகாராம், வர வேண்டும், வர வேண்டும்" என்று உபசாரஞ் செய்து உட்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/168&oldid=1233832" இலிருந்து மீள்விக்கப்பட்டது