உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

வஸந்தமல்லிகா

உனக்குத் தேவையான போது என்னுடைய ஜாகைக்கு வந்து இதைப் பார்த்துக் கொள்ளலாம்.

சகா : சரி; நீங்கள் அவ்வளவு தூரம் ஆசைப்படும் போது நான் கொடுக்காமலிருப்பது பிசகு; எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிய வண்ணம் 9,900 ரூபாயையும் அந்தப் படத்தையும் எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, ஒரு புஸ்தகத்தில் ரூ.10,000-க்கு அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான்.

உடனே பணத்தையும் படத்தையும் எடுத்துக்கொண்டு மோகனராவ் தமது ஜாகைக்குப் போய்ச் சேர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/170&oldid=1233834" இலிருந்து மீள்விக்கப்பட்டது