பக்கம்:வசந்த மல்லிகா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்கினி பகவானுக்கு விருந்து

159

மெய்ம் மறந்து அதனிடம் பேசுவதும், அதை முத்தமிடுவதும் வழக்கம். அவ்விதமே அன்று நாடகம் நடந்த சமயத்தில் அவர் தமது ஜாகையில் படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, "அடி கட்டழகி! உன் மனசில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாயோ தெரியவில்லையே! நீ ஏன் இவ்வளவு துக்கத்தோடு புன்னகை செய்கிறாய்? நீ எவ்வளவுதான் சிரிக்க முயன்றாலும், உன்னை உள்ளூர வருத்தும் விசனம் நன்றாக வெளியில் தெரிகிறதே! உன்னைப் போல் இருந்த யௌவன மங்கையைக் கண்டதனால், நான் உன்னுடைய படத்தை இப்படி வைத்துக் கொண்டு, வாயில் வந்தவிதம் பிதற்றுவதைப் பற்றி நீ உயிருடனிருந்தால் என்ன சொல்ல மாட்டாய்! பைத்தியம் பிடித்தவனென்று என்னை மதித்து சிரிப்பாயோ, அல்லது என்னுடைய பரிதாபகரமான நிலைமையைப் பற்றி என் விஷயத்தில் இரக்கங் கொள்வாயோ! நீ முற்றிலும் இளகிய மனசுடையவள் என்பதை உன்னுடைய முகம் நன்றாகக் காட்டுகிறது. அடி என் சீமாட்டி! நீ அவசியம் என்மேல் இரக்கமே கொள்வாய். சந்தேகமில்லை" என்று சொல்லிக்கொண்டே சிறிது நேரம் அதை உற்று நோக்கிய வண்ணமிருந்தார்.

"சே! நான் எவ்வளவு மடையனாகி விட்டேன்! எனக்கிருந்த நல்ல அறிவெல்லாம் எங்கேயோ போய்விட்டதே! நான் ஒரு படத்தின் மேல் இவ்வளவு மோகங் கொண்டு, அதனுடன் நெடு நேரம் இப்படி சம்பாஷிப்பதை என்னுடைய சிநேகிதர்கள் கண்டால், என்னைப் பற்றி என்ன நினைக்க மாட்டார்கள்! நான் இந்தப் பைத்தியத்தை இன்றோடு விலக்க வேண்டும். அடி கண்மணி! நீ இப்படி எனக்கெதிரில் எப்போதும் இருக்க முடியாது. நீ பீரோவுக்குள் போய் அங்கே இருக்க வேண்டியதுதான் முடிவு. உன்னை இரண்டு மாச காலம் வெளியில் எடுக்காமல், பீரோவில் பூட்டி வைத்தால், உன்னையும் உன்னைப் போலிருந்த அந்தப் பெண்ணையும் நான் சுத்தமாக மறந்து விடுவேன். இதுவே சரியான காரியம். போ உள்ளே" என்று சொல்லியவண்ணம் அவர் படத்தை பீரோவில் வைத்துப் பூட்டினார்.

என்றாலும் அவருக்குப் பொழுது போவது மிகவும் கடினமாகத் தோன்றியது. "யாவராலும் புகழப்படும் அந்த ஸஞ்சலாட்சியை நாமும் பார்த்துவிட்டுத்தான் வருவோமே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/177&oldid=1233844" இலிருந்து மீள்விக்கப்பட்டது