பக்கம்:வசந்த மல்லிகா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஸந்தமல்லிகா

1-வது அதிகாரம்

பேய்களும் பெண்மானும்

சோழ மன்னர்களும் மகாராஷ்டிர அரசர்களும் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில், அவர்களது இராஜதானியாயிருந்து பெருமை பெற்ற தஞ்சைபுரிக்குக் கிழக்கில் நான்கு மைல் தூரத்திலுள்ள பவானியம்பாள்புரம் என்னும் சிற்றூர் மிக்க இரமணியமான ஒரு ஸ்தலம். தஞ்சையிலிருந்த அரசப் பெருமாட்டிகள் படகுகளில் அமர்ந்து விளையாடி வேடிக்கையாகப் பொழுதுபோக்கும் பொருட்டு தஞ்சைக்கும் பவானியம்பாள்புரத்திற்கும் மத்தியில் நான்கு மைல் நீளம் அரை மைல் அகலத்தில் வெட்டப்பட்டு சமுத்திரம் என்று அழைக்கப்பெற்ற பெருத்த ஏரியில் எக்காலத்திலும் வற்றாத தெளிந்த தண்ணிர் நிறைந்திருக்கும்.

அந்தச் சமுத்திரத்தின் கிழக்குக் கரையின் மேலுள்ள பவானியம்பாள்புரத்தின் இயற்கையழகும்; எங்கு நோக்கினும் காணப் படும் தோப்புகளும், சோலைகளும், தாமரைத் தடாகங்களும், ஒடைகளும், உன்னதமாக அமைக்கப்பெற்ற தேவாலயங்களும், திருக்குளமும், தேர்களும், அழகிய நீண்ட வீதிகளும் காண்போர் கண்களையும் மனத்தையும் ஒருங்கே கவர்ந்தன. பவானியம்பாள்புரமும், வேறு 35-கிராமங்களும் பரசுராம பரவா என்னும் மகாராஷ்டிரச் சீமானினது ஜெமீன் சமஸ்தானம். அவருக்கு தஞ்சையில் ஒரு பெருத்த மாளிகையிருந்ததாயினும், பவானியம்பாள்புரத்தின் மேற்குக் கோடியில் சமுத்திரக் கரையின்மீது நான்கு பக்கங்களிலும் பூஞ்சோலையாற் சூழப்பெற்ற விசாலமான ஒரு மாளிகை இருந்தது. அவர் அடிக்கடி அங்கே தங்கி இனிமையாய்ப் பொழுதுபோக்கும் பொருட்டு அந்த மாளிகை அமைக்கப் பெற்றிருந்தது.

இத்தகைய மேம்பாடுகள் நிறைந்த சிற்றுாரின் மேலை வீதியிலிருந்த ஒரு வீட்டின் கூடத்தில் விரிக்கப்பட்டிருந்த பாயில்

வ.ம-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/19&oldid=1229120" இலிருந்து மீள்விக்கப்பட்டது