பக்கம்:வசந்த மல்லிகா.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

வஸந்தமல்லிகா

முகத்தில் நன்றாகத் தெரிந்தது. "அடடா! நான் என்ன மறு மொழி சொல்லப் போகிறேன். ஈசுவரா! இதுவும் உன்னுடைய சோதனையா!" என்று பெருமூச்சு விட்டு தனக்குள் மொழிந்து கொண்டாள்.

அவளது முகத்தையும் சொல்லையும் நன்றாகக் கவனித்த மோகனராவ், "என்னுடைய இச்சை பூர்த்தியாவதற்கு ஏதோ இடைஞ்சல் இருப்பதாகத் தெரிகிறது. நம்பிக்கையை விட்டுவிட வேண்டியதுதானா? எவ்வளவுதான் நான் பணக்காரனாயிருந் தாலும், இவ்வளவு பேரழகும், புத்திசாலித்தனமும் உள்ள உனக்கு என்மேல் விருப்பமுண்டாக வேண்டுமென்பது என்ன கட்டாயம்" என்றார்.

மல்லி : (விசனமாக) அப்படிப்பட்ட எண்ணம் ஒன்றுமில்லை, தங்களை அடைய எவள் புண்ணியம் செய்திருக் கிறாளோ அவளுக்கல்லவா அந்தப் பாக்கியம் கிடைக்கும். என் அதிர்ஷ்டம் எவ்வளவென்பது என்னுடைய தற்கால நிலைமையிலிருந்தே தெரியவில்லையா? துரதிர்ஷ்டமே உருவாய் வந்த நான் தங்களுடைய அன்பிற்கும் ஆசைக்கும் எப்படி உரிமையுடையவளாகப் போகிறேன்?

மோக : நீ என்னைப் பரிஹாஸம் செய்கிறாய் போலிருக்கிறது.

மல்லி : பரிஹாஸமல்ல; உண்மையே; நான் தங்களிடம் பரிஹாஸம் செய்தால், உடனே என் தலையில் இடி விழுந்து விடாதா? உண்மையில் அதல்ல. தங்களுடைய நண்பரை நான் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்பது நிச்சயமாய் விட்டது. ஆகையால், இனி என்னால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. மன்னிக்கவேண்டும்.

மோக : (முகம் மாறுபட்டவராய்) என்னுடைய நண்பர் யார்? கோனூர் மிட்டாதாரா?

மல்லி : இல்லையில்லை.

மோக : (சிறிது யோசனை செய்து) பீமராவோ?

மல்லி : ஆம்; ஆம்.

மோக : (திகைப்பும் வியப்புமடைந்து) ஓகோ! அப்படியா! நம்முடைய பீமராவையா கலியாணம் செய்து கொள்ளப் போகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/192&oldid=1233937" இலிருந்து மீள்விக்கப்பட்டது