பக்கம்:வசந்த மல்லிகா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வஸந்தமல்லிகா

ஒருநாட் பிற்பகலில் இரண்டு மகாராஷ்டிரப் பெண்கள் உட்கார்ந்து புதிய உடைகள் தைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெதிரில் பற்பல நிறங்களையுடைய சீட்டித் துணிகளும், வெல்வெட்டுத் துணிகளும், கிழிபட்ட துண்டங்களும், தைப்பதற்குரிய கருவிகளும் அலங்கோலமாய்க் கிடந்தன. சகோதரிகளான அவ்விரண்டு பெண்களில் மூத்தவளுக்கு 17-வயதும், சிறியவளுக்கு 14-வயதும் இருக்கலாம். ஆயினும், இருவரும் தசைப்பிடிப்பற்ற மாநிறமான சரீரத்தைக் கொண்டவராயும், அதிக அழகானவர்கள் என்று சொல்வதற்கு அருகமற்றவராயும் இருந்தனர்.

அவர்கள் தமக்குள் அடியில் வருமாறு சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்.

"ஓர் அடி தூரத்திலிருக்கும் சமுத்திரத்திற்குப் போய் ஜலங் கொண்டுவர இவ்வளவு நேரமா! இவள் என்ன பெண்பிள்ளை! புருஷன் வீட்டில் இவள் எப்படிக் குப்பைகொட்டி வாழப் போகிறாள்? போன அன்றைக்கிருந்து புதனன்றைக்கே திரும்பி வந்துவிடுவாள்" என்று அருவருப்புடன் கமலாபாயி தனது தங்கையை நோக்கிக் கூறினாள். "இவள் புருஷன் வீட்டுக்குப் போனாலல்லவா அந்தக் கவலை! போகும்போது பார்த்துக் கொள்ளலாம்" என்றாள் ஸீதாபாயி.

கமலா : குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு சமுத்திரக் கரைக்குப் போய்விட்டால், இவளுக்கு இது பூலோகமோ கைலாசமோ என்னும் சந்தேகம் வந்துவிடுகிறது. யானை தீவாந் தரத்தை நினைத்துக்கொள்வதைப் போலத் தன்னுடைய உடம் பையே மறந்துவிடுகிறாள். வீட்டுக்கு வரவேண்டும் என்பதை யும், இடுப்பிலிருக்கும் குடத்தையும், தான் வந்த காரியத்தையும் கூட மறந்துவிடுகிறாள்.

ஸீதா : இன்னம் கொஞ்சகாலம் போனால் தன்னுடைய இடுப்பிலிருக்கும் பாவாடையைக்கூட மறந்துவிடுவாள்.

கமலா : நம்முடைய அப்பா வருவதற்குள் இந்தத் துணிகளையெல்லாம் எடுத்து மடித்து வைத்துவிட்டு, வீட்டைப் பெருக்கிச் சுத்தி செய்ய வேண்டுமென்றும், பொழுது போய்விட்டபடியால் சீக்கிரம் வரவேண்டுமென்றும் நான் எத்தனையோ தரம் படித்துப் படித்துச் சொன்னேன்; இவள் தன் வழக்கப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/20&oldid=1234407" இலிருந்து மீள்விக்கப்பட்டது