184
வஸந்தமல்லிகா
அவர்தான் எல்லாவற்றையும் வஸந்தராவுக்கு எழுதி வைத்து விட்டாரே! அந்த சாஸனம் அவரிடத்தில் இருக்க இதென்ன சாஸனம்? இதை நீங்கள் படித்துப் பார்த்தீர்களா?
மோக : முழுவதையும் படிக்கவில்லை . ஆரம்பக்க கொஞ்சம் படித்தேன். நான்கு எல்லைகளும் மேற்படி மேற்படியுமே இருந்தன. மேலே படிக்க முடியவில்லை. அதற்கள் ஸாரட்டு வந்தது. அதைப் பார்க்கப் போனேன். பத்திரம் இதோ இருக்கிறது; நீயே படித்துப் பார் என்று சொல்லியவண்ணம் எழுந்து பீரோவின் மேல் கையை வைத்துப் பார்த்தார். சாஸனம் அகப்படவில்லை. "இங்கேதானே வைத்தேன் காணோமோ எங்கே போய்விட்டது?" என்று சொல்லிக்கொண்டே திகைத்து மேலும் தேடினார்.
பீமராவும் மிகுந்த ஸஞ்சலத்தைக் காண்பித்து, "ஒருவேளை காற்றில் பறந்து போயிருக்குமோ?" என்று சொல்லியவண்ணம் அறை முழுவதிலும் தேடிப் பார்க்கத் தொடங்கி, "ஒருவேளை பீரோவில் வைத்துப் பூட்டியிருப்பீர்களோ?" என்றான்.
"இல்லை, இல்லை. எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இதன் மேலேயே வைத்தேன்" என்ற சொல்லியவண்ணம் மோகனராவ் பீரோ மேஜை முதலியவற்றைத் திறந்து பார்த்தார். அவரது தேகம் அச்சத்தினால் படபடவென்று துடித்தது.
"நீங்கள் இங்கே வைத்திருந்தால் அது எங்கே போயிருக்கும்? இங்கே வைத்ததாக மறதியினால் சொல்லுகிறீர்களோ என்னவோ? உள்ளே இரும்பு பெட்டியில் ஒருவேளை வைத்தீர்களோ?" என்றான் பீமராவ்.
"இரும்புப் பெட்டியை இன்று நான் திறக்கவே இல்லையோ என்று மோகனராவ் தமது நெற்றியின் மேல் கையை வைத்துக் கொண்டு யோசனை செய்தார். பீமராவ் அங்குமிங்கும் சென்று தேடிப் பாசாங்கு செய்து அடுப்பண்டை போய் தான் போட்டிருந்த எரிந்த காகிதத் துண்டை எடுத்துக் காட்டி, "இதென்ன எரிந்து கிடக்கிறதே! இதுதானோ என்று பாருங்கள்" என்று கூறியவண்ணம் அதை அவரிடம் நீட்டினான். அதை வாங்கிப் பார்க்க மோகனராவ், பெரிதும் கலங்கி, "அடடா எரிந்து போயிருக்கிறதே! பீரோவின் மேலிருந்த பத்திரம் நெருப்புக்கு