186
வஸந்தமல்லிகா
முக்கியமான தஸ்தாவேஜி என்று நினைத்து நீங்கள் விசனப்பட ஆரம்பித்து விட்டீர்களே!" என்றான். அதைக் கேட்க, அவரது மன வேதனை ஒருவாறு குறைவுபட்டது.
மோக : அப்படியானால் அது உபயோகமற்ற காகிதமென்றா நினைக்கிறாய்?
பீம : உபயோகமுள்ளதாய் இருந்தால் அதை இந்தப் படத்திலா வைத்திருப்பார்கள்? அவர்களுக்கு இதை வைக்க இரும்புப் பெட்டி இல்லாமலா போய்விட்டது?
மோக : (யோசனை செய்து) எல்லாவற்றிற்கும் இதை ஸகாராம் ராவிடம் தெரிவிப்பது நல்லதென்று நினைக்கிறேன்.
பீம : அதனால் என்ன உபயோகம்? நீங்கள் சொல்வதை அவர் நம்ப மாட்டார்.
மோக : ஏன் நம்ப மாட்டார்?
பீம : அவர் வஸந்தராவின் ஸர்வாதிகாரி. நீங்கள் புதிய சாஸனம் ஒன்றைக் கண்டதாகச் சொன்னால், அது யார் பேருக்கு எழுதப்பட்டது, எந்த வருஷம், மாதம், தேதி என்று கேட்கப் போகிறார். நீங்கள் "எனக்குத் தெரியாது" என்று சொல்லப் போகிறீர்கள். அப்படியானால் அதைக் கொடுங்கள் பார்க்கலாம் என்பார். அது நெருப்பில் எரிந்து போய் விட்டதென்று நீங்கள் சொல்ல வேண்டும். உடனே அவர், "இவ்வளவுதானா" என்று சிரிக்கப் போகிறார். அவரிடம் சொல்வதனால் இதுதான் நடக்கும். இதனால் என்ன பலன்?
மோக : (சிறிது யோசனை செய்து) அப்படியானால் இதனால் ஒருவருக்கும் கெடுதல் இல்லையென்றா நினைக்கி றாய்? இது உண்மையான சாஸனமல்லவா?
பீம : அதைப்பற்றி ஸந்தேகமே தேவையில்லை. குப்பையில் போடவும் யோக்கியமற்ற காகிதத்தைக் கண்டு நீங்கள் ஏன் இப்படிக் கவலைப்பட வேண்டும் - என்றான்.
அதைக்கேட்ட மோகனராவின் ஸஞ்சலம் ஒருவாறு நிவர்த்தியாயிற்று. அதன்பிறகு அரைநாழிகை வரையில் அவ்விருவரும் புதிய ஸாரட்டு குதிரை முதலியவற்றைப் பற்றிப் பேசினர். பிறகு பீமராவ் அவரிடம் செலவு பெற்றுக் கொண்டு, அந்த வீட்டை