சுவர்க்கோழி
193
தமயந்தி அவ்விதம் சுவரில் துளை செய்த பிறகு அதற்கருகிலேயே எப்போதும் உட்கார்ந்துகொண்டு, பீமராவின் அறையில் என்ன நடக்கிறதென்று கவனித்துக் கொண்டே இருந்தாள்.
அவள் சென்னையில் வஸந்தராவ் சௌக்கியமடையும் வரையில் அவர் உடனிருந்து, அவருக்குத் தேவையான உபசரணைகளைச் செய்து, அவரது அபிமானத்தையும், மதிப்பையும் பெற்றாள். அவ்விருவருக்கும் ஒருவரது நற்குணம் மற்றவருக்கு நன்றாகத் தெரிந்தது. அவர் தமது விசனத்தை எல்லாம் அவளிடத்தில் வெளியிட்டார். அவளுக்கும் அவர்மீது ஒருவித அபிமானமும் ஆசையும் பற்றும் ஏற்பட்டன. ஆனால், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காதல் மாத்திரம் கொள்ளவில்லை . அவரிடத்திலிருந்து ஓடினவளே ஸஞ்சலாக்ஷி என்றும், அவளது மனதை பீமராவே அவ்விதம் கலைத்தவன் என்றும், தமயந்தி தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள். பீமராவின் மேல் அவள் வைத்திருந்த பிரேமை முழுதும் வெறுப்பாக மாறியது. தனது விஷயத்திலும் வஸந்தராவின் விஷயத்திலும் அவன் செய்த வஞ்சகத்தை நினைத்து நினைத்து, அவன் மீது பெருத்த பகைமை பாராட்டினாள். அவற்றிற்கெல்லாம் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று அவள் தனக்குள் உறுதி செய்து கொண்டாள். அவனுக்கருகில் இருந்து அவனது இரகஸியங்களை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு, அவன் எங்கு குடியிருக்கிறான் என்பதை அறிந்து, அதன் அண்டை வீட்டை வாடகைக்கு வாங்கிக் கொண்டு, தான் இன்னாளென்பதை அவன் அறியாதபடி அங்கு வந்து சேர்ந்தாள். அவள் தனது உட்கருத்தை வஸந்தராவிடம் தெரிவியாமல் ஏதோ அவசர நிமித்தம் தஞ்சைக்குப் போய்விட்டு வருவதாக அவரிடம் தெரிவித்து விட்டு வந்து சேர்ந்தாள். தான் எப்படியாகிலும் முயன்று, அவனது அந்தரங்கங்களை அறிந்து கொண்டு அவனது எண்ணத்தில் மண்ணைப் போட்டு ஸஞ்சலாக்ஷியை மீட்டு வஸந்தராவிடம் ஒப்புவிக்கக் கருதினாள்.
அன்று சாயங்காலம் ஏழு மணி சமயத்தில் பீமராவ் அறையில் பேசிய சத்தத்தைக் கேட்டு தமயந்தி, தான் செய்திருந்த துளையில் கண்ணை வைத்துப் பார்த்தாள். பீமராவும், ஸகாராம்
வ.ம.-14