கடற்கரையில் கடும் போர்
199
நிரம்பவும் குதூகலமாகவும் காணப்பட்டு மணமகனுடைய மனத்தைக் குளிரச் செய்வாய்.
கிரு : (புன்சிரிப்போடு) என் கலியாணம் வரட்டும். அப்போது சொல்லுகிறேன். நான் உட்காருவதற்கு எட்டுக் குதிரைகள் கட்டிய ரதமும், அதன் நாற்புறத்திலும் சாமரை வீச தாசிகளும், முன்னும் பின்னும் நூறு ஸாரட்டுகளும் வர வேண்டாமா?
மல்லி : (புன்சிரிப்போடு) மைசூர் மகாராஜாவின் கலியாணத்தைப் போலவா?
கிரு : அதுமட்டுமா? யானைகள் குதிரைகள் ஒட்டைகள் சிப்பாயிகள் மேளம் பாண்டு எடுபிடி ஆலவட்டம் முதலிய வற்றுடன் போக வேண்டாமா?
மல்லி : பேஷ்! நன்றாகச் சொல்லுகிறாய்!
கிரு : கலியாணமான பிறகு புருஷனும் ஸ்திரீயும் இணை பிரியாமலும், கவலை என்பதையே அறியாமலும், எப்போதும் இன்பமே அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புருஷனோடு ஸுகமாக நாடகம் பார்த்து ஆநந்திக்க வேண்டும். சம்பாத்தியத்தைப் பற்றி கொஞ்சமும் கவலையே இருக்கக் கூடாது.
மல்லி : நாடகத்தில் உனக்கு இவ்வளவு ஆசை இருக்கிறதே! எனக்கு அதில் கொஞ்சமும் ஆசையே இல்லை. உன் பொருட்டு இரண்டொரு தடவைகளில் நான் வேஷம் போட்டுக் கொண்டேன். இல்லாவிட்டால், அதில் நான் ஒருநாளும் தலையிட்டிருக்கவே மாட்டேன்; அதற்கு நான் தகுந்தவளே அல்ல.
கிரு : (புன்சிரிப்போடு ) ஆம்; நீ ராஜாத்தி ஆவதற்கே தகுந்தவள். மல்லிகா! உன்னைப் பார்க்கும் போது ஒவ்வொரு சமயம் நீ நிரம்பவும் உன்னத பதவிக்குரியவள் என்றும், ஏதோ கால வித்தியாசத்தினால் எங்களோடு இருக்கிறாய் என்றும் ஒரு நினைவு என் மனதில் உண்டாகிறது. தவிர, உன்னுடைய உண்மை நிலைமையும் உனக்குத் தெரியாமல் இருப்பதாக நினைக்கிறேன். அதிருக்கட்டும்; கலியாணம் இன்னம் ஏழு நாள் இருக்கிறது. கலியாணமானவுடன் பீமராவ் உன்னைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டால், உன்னை விட்டுப் பிரிந்து நாங்கள் எப்படி இருப்போம்?