உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

வஸந்தமல்லிகா

நன்றாக மர்த்தனம் செய்து விடுகிறேன்" என்று நினைத்து வீராவேசம் அடைந்தார்.

சற்று தூரம் நடந்த பின் வஸந்தராவ் தமது ஜாகைக்குத் திரும்ப நாழிகையானதை உணர்ந்து, பாட்டைக்கு வர நினைத்து, மோகனராவ் இருந்த இடத்தின் வழியாக நடந்தார். அவர் மோகனராவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தமையால், பின்னவர் அவரை உற்று நோக்கி, அவர் வஸந்தராவென்றே உறுதி செய்து கொண்டவராய், உடனே கோபத்தோடு துள்ளி எழுந்தார். "சரி; நல்ல நேரத்தில் இவன் அகப்பட்டுக் கொண்டான்; இவன் செய்த அநியாயத்திற்குத் தகுந்தபடி இவனை இங்கேயே தண்டித்து விடுகிறேன். ஒரே குத்தில் ஒரு குடம் ரத்தம் கக்கும்படி செய்கிறேன்" என்று தீர்மானம் செய்து கொண்டு யுத்தத்திற்குத் தயாராக நின்றார்.

வஸந்தராவ் எதிரிலிருந்த மோகனராவை அப்போதே கவனித்துப் பார்த்தார். அப்படி நின்றவர் கலியாணபுரம் ஜெமீந்தார் என்பதை உணரவே வஸந்தராவ் வியப்படைந்தார். அவர்கள் இருவரும் அதற்கு முன் நண்பர்களாய் இருந்தவர்களாதலால், மோகனராவைக் கண்டவுடன் வஸந்தராவுக்கு மிகுந்த சந்தோஷத்தினால் முகமலர்ச்சி உண்டாயிற்று. அவன் புன் சிரிப்பைக் காட்டிய முகத்தோடு "அப்படியா! மோகனராவா! இன்று சுபதினந்தான்" என்று உண்மையான அன்போடு உபசார வார்த்தை கூறினார்.)

மோகனராவ் மறுமொழி ஒன்றும் சொல்லாமல் பதை பதைத்த தேகத்தினராய் நின்றார். வஸந்தராவ் சிறிது சந்தேகத்தோடு நடந்து அவருக்கு நிரம்பவும் அருகில் நெருங்கி, "என்ன இவ்வளவு சீக்கிரத்தில் மோகனராவ் தம்முடைய சிநேகிதனை மறந்து விட்டது!" என்றார். “யோக்கியனுடைய சிநேகமாயிருந்தால், அது நிலைத்திருக்கும். அயோக்கியனுடைய சிநேகம் எப்படி நிலைத்திருக்கும்?" என்று ஆத்திரத்தோடு மறுமொழி கூறினார் மோகனராவ்.

அந்தக் குரூரமான மொழியைக் கேட்ட வஸந்தராவின் முகம் மாறியது. தாம் எதிர்பாராத அந்த விரோதத்தின் காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளக் கூடாதவராய் வஸந்தராவ் வியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/222&oldid=1233999" இலிருந்து மீள்விக்கப்பட்டது