கடற்கரையில் கடும் போர்
205
படைந்து, "அப்படியானால், நான் உம்முடைய சிநேகத்துக்கு அருகமற்றவன் என்பது உம்முடைய எண்ணமா?" என்றார்.
மோக : (அழுத்தமாக) ஆம்; தடையென்ன?
வஸ : (சிறிது கோபத்தோடு) அப்படி நினைக்கக் காரணம் என்ன? நான் எந்த விஷயத்தில் யோக்கியதை இல்லாமல் நடந்து கொண்டேன்? அவதூறான இந்த வார்த்தையைச் சொன்னது மோகனராவானதால் விட்டேன். இன்னம் வேறு எவனாவது இப்படிச் சொல்லியிருந்தால், இந்நேரம் அவனுடைய பற்களை உடைத்திருப்பேன். நீர் என்னை இப்படித் தூஷிக்கக் காரணம் என்ன ?
மோக : ஒன்றையும் அறியாத அபலைப் பெண்ணை வஞ்சித்து அழைத்து வந்து கெடுக்க நினைத்த அயோக்கிய சிகாமணியான உனக்குப் பௌரஷிமும் இருக்கிறதா?
வஸ : (ஆத்திரத்தோடு) ஆகா! என்ன சொன்னீர்? ஏது வர வர வார்த்தை மிஞ்சுகிறது! நான் எந்த ஸ்திரீயை வஞ்சித்தேன்?
மோக : இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து போய் விட்டயோ? யோசனை செய்து பார். ஸஞ்சலாக்ஷியின் நினைவு ஒழிந்து போய் விட்டதா?
வஸ : (ஆத்திரத்தோடு) யார் ஸஞ்சலாக்ஷியா? அந்தப் பெயருடைய பெண்ணை நான் கண்ணாலும் பார்த்ததில்லையே! உமக்கென்ன பைத்தியம் முற்றிப் போய் விட்டதா? இல்லாவிட்டால் குடிவெறியா? பேசுவதை யோசனை செய்து பேசும்; நீ என்று மரியாதை தவறிப் பேச வேண்டாம்.
மோக : (கோபத்தோடு) அடே! அயோக்கியக் கழுதை! யாருக்கடா குடி வெறி? நீதான் குடி வெறியால் ஸஞ்சலாக்ஷியை இதற்குள் மறந்து விட்டாய். நீ அவளை உண்மையில் அறிய மாட்டாயோ?
வஸ : (சிறிது யோசனை செய்து) ஆம், ஆம்; ஸஞ்சலாக்ஷி என்று தஞ்சாவூர் அரண்மனையில் ஒருத்தி நாடகத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவளைப் பற்றி எனக்கொன்றும் தெரியாதே! - என்றார்.
அப்போது அவரது தேகம் கோபத்தினால் பதறியது. எதிர்பார்க்காத இந்த அவமானத்தைப் பொறாமல் பொங்கியெழும்