கடற்கரையில் கடும் போர்
207
அந்தக் கூச்சலைக் கேட்ட ஜனங்கள் ஓடிவந்து குறுக்கிட்டு இருவரையும் பிரித்துவிட்டு, "யாரையா நீ! ஆண்பிள்ளையா நீ! மகா சூரன்! பெண்பிள்ளையைக் குத்தி விட்டாயே!" என்று மோகனராவைத் தூஷிக்க, சிலர் அவளைத் தூக்கியெடுத்தனர். அப்போது அவளைப் பார்த்த வஸந்தராவ், "அடடா! தமயந்தி பாயி எங்கே வந்தாள்! என்ன ஆச்சரியம்! யாராவது ஓடி ஜலம் கொண்டு வாருங்கள்" என்று கூச்சலிட்டுக்கொண்டு ஓடி வந்து அவளை வாரியெடுத்து தமது மார்பில் சார்த்திக் கொண்டார். அதற்குள் ஒருவன் ஓடிப் போய் சமுத்திர ஜலத்தில் துணியை நனைத்து வர, அவர் அதை வாங்கி, அவளது முகத்தில் துடைத்தார். அதற்குள் வேறொருவன் பாட்டைக்குப் போய் அங்கிருந்த தண்ணீர்க் குழாவில் வந்த ஜலத்தை தனது இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு வந்து அதை அவள் வாயில் விட, அவள் இரண்டொரு நிமிஷத்தில் கண்ணை விழித்துக் கொண்டு, "உங்களுக்கு அதிகமாக அடி இல்லையே?" என்று வஸந்தராவைக் கேட்க, அவர் “எனக்கொன்றுமில்லை. நீ ஏன் இதில் வந்து தலையிட்டாய்?" என்றார். அதற்குள் நன்றாகத் தெளிவு அடைந்த தமயந்தி, "இதென்ன சண்டை ? ஏன் நீங்கள் இருவரும் இப்படிச் சண்டை போடுகிறீர்கள்? என்ன காரணம்?" என்று மோகனராவைப் பார்த்துக் கேட்டாள்.
மோக : அதை வஸந்தராவே சொல்லுவார்.
வஸ : எனக்குக் காரணம் தெரியவில்லை . அவரே சொல்ல வேண்டும்.
தம : (கோபச் சிரிப்போடு ) அப்படியானால் உங்கள் இருவருக்கும் பைத்தியம் போலிருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் குத்திக் கொள்ள முயன்றீர்கள். அதற்குக் காரணம் உங்களுக்கே தெரியவில்லையோ?
மோக : (ஆத்திரத்தோடு ) இவரே சொல்லுவார். இவர் ஒரு பெண்ணைத் திருட்டுத் தனமாக அவளுடைய குடும்பத்திலிருந்து அழைத்து வந்து விட்டார். அவளுடைய பெயர்...........!
வஸ : ஸஞ்சலாக்ஷியாம். அவளை நான் பார்த்ததே இல்லை.
அதைக் கேட்ட தமயந்தி மாறி மாறி இருவரது முகத்தையும் பார்த்துப் பரிகாசம் செய்து, "போனது போகட்டும். வாருங்கள்