பக்கம்:வசந்த மல்லிகா.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27-வது அதிகாரம்

வஞ்சகத்தை வென்ற வஞ்சி

பீமராவின் கலியாணத்தை கிருஷ்ணவேணியின் வீட்டிலேயே நடத்தி வைக்க நிச்சயமாயிற்று. அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. முகூர்த்த தினத்திற்கு முதல் நாளே பீமராவும் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அன்றிரவு அவனுக்கு நிரம்பவும் சிறப்பான விருந்து தயார் செய்யப்பட்டது. ஆகையால், அன்றிரவு போஜனம் நடப்பதற்கு மிகுந்த கால தாமதமாயிற்று. மேன் மாடத்தில் ஒரு பெரிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மல்லிகா அங்கு தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். கலியாணம் நெருங்க நெருங்க, அவளது மன வேதனை அதிகரித்துக் கொண்டே வந்தது. இன்னதென்று அறிய ஒண்ணாத ஏதோ ஒரு சஞ்சலம் அவளது மனத்தை வருத்த ஆரம்பித்தது. எப்போதும் வஸந்தராயரது நினைவும் வடிவமுமே மயமாய் அவளது மனதில் நிறைந்திருந்தன. அவள் கலியாணத்தை சந்தோஷகரமான காரியமாகவே நினைக்கவில்லை. கொலைக்குற்றம் புரிந்த ஒரு குற்றவாளி தனக்கு மரணதண்டனை விதிக்கப்படும் தினத்தை எவ்வளவு மனவேதனையோடு எதிர்பார்த்து வருந்துவானோ அவ்விதம் அவள் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தாள்.

பீமராவ், மல்லிகா எவ்வகையாலும் தனது வலையிலிருந்து தப்பிப் போக மாட்டாளென்றும், மறு நாட்காலையில், அவள் தனக்கு மனைவி ஆய்விடுவாள் என்றும், தான் உடனே பெருத்த சமஸ்தானத்திற்கு ஜெமீந்தாராகி விடலாம் என்றும், அதன் பின் தனக்கு எவனும் நிகரில்லை என்றும் நினைத்து மானசீகக் கோட்டைக் கட்டி, அதையே நினைத்து நினைத்து ஆநந்தக் கடலில் மூழ்கி இருந்தான். கீழேயிருந்த கிருஷ்ணவேணியுடன் ஸல்லாபமாகப் பேசிக் கொண்டிருந்த அவன், "மல்லிகா என்ன செய்கிறாளென்று பார்த்து விட்டு வருகிறேன்" என்று சொல்லிய வண்ணம் மேன்மாடத்திற்கு வந்தான்; அங்கு விசனக் கடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/228&oldid=1234007" இலிருந்து மீள்விக்கப்பட்டது