பக்கம்:வசந்த மல்லிகா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பேய்களும் பெண்மானும்

5

அப்பா இவளிடத்தில் கொஞ்சம் அன்பைக் காட்டுகிறார். அதனால் இவளுக்குக் கொழுப்பு ஏறிவிட்டது. தன்னைக் கண்டிப்பதற்கு ஒருவருமில்லையென்று நினைத்துக் கொண்டாள் போலிருக்கிறது. புஷ்பவதியான பெண் இப்படிக் கண்ட இடத்தில் தன்னிச்சைப்படி நிற்கலாமா? இன்றைக்கு அப்பா வந்தவுடன் அவரிடத்தில் எல்லாவற்றையும் நாம் சொல்லிவிட வேண்டும்.

ஸீதா : இவள் அப்பாவை மாத்திரமா மயக்குகிறாள்? இவளைப் பார்ப்பவர் எல்லோரும், 'இந்தப் பெண் யார்? இவளுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?’ என்று இவளைப் பற்றிக் கேட்கிறார்களேயொழிய நம்மைக் கண்ணெடுத்தும் பார்க்கிறதில்லையே! நம்மிடத்தில் இல்லாத விசேஷம் இவளிடத்திலென்ன இருக்கிறது?

கமலா : துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியதைப் போல மல்லிகாபாயி என்று டம்பமாகப் பெயர் வைத்துக் கொண்டிக்ருகிறாளல்லவா? அதுதான் விசேஷம். வெறும் பெயரைத் தவிர வேறு என்ன யோக்கியதை இருக்கிறது? ஒன்றுமில்லை.

ஸீதா : இரண்டு கண்ணுமவிந்த குருடனைக் கமலக்கண்ணனென்று கூப்பிடுவதைப் போலிருக்கிறது.

கமலா : நாயை 'ரோஜா' வென்று அழைப்பதனால் அதன் துர்நாற்றம் மாறி, அதன்மேல் ரோஜாவின் மணமுண்டாகுமா? ஒரு நாளுமில்லை. வரப்போகும் தீபாவளிப் பண்டிகையில் இவளுடைய வாயில் மண்ணைப் போட்டுவிடுகிறேன். அதுதான் இவளுடைய அகம்பாவத்துக்குத் தகுந்த தண்டனை.

ஸீதா : காலடிச் சத்தம் கேட்கிறது; வந்துவிட்டாள்.

உடனே அவ்விரு மங்கையரும் தமது சம்பாஷணையைத் திடீரென்று நிறுத்திவிட்டு ஒன்றையும் அறியாதவரைப் போலக் குனிந்தவண்ணம் தைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இடையில் வைத்த தண்ணீர்க் குடத்தோடும், தளர்ந்த நடையோடும், புன்னகை பூத்த முகத்தோடும், மங்கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/23&oldid=1229124" இலிருந்து மீள்விக்கப்பட்டது