பக்கம்:வசந்த மல்லிகா.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

வஸந்தமல்லிகா

பீம : (கோபத்துடன்) அடி தமயந்தி! போதும்; நிறுத்து; இனி உன்னைப் பெண் என்று பார்க்க மாட்டேன். மரியாதை கெட்டுப்போம்; பைத்தியம் பிடித்து உளராதே. நீ வந்து செய்த காரியம் போதும். வந்த வழியைப் பார்த்துக் கொண்டு புறப்பட்டுப் போ. ஸகாராமாவது ராவாவது? அவன் யார். பித்தம் தலைக்கேறி விட்டதோ?

தம : (ஏளனமாக) இதற்குள் போய்விடுவேன் என்று பார்த்தாயா? ஓகோ! அப்படி நினைக்காதே. உனக்கு ஸகாராம் ராவைத் தெரியாதா? கலியாணபுரம் ஜெமீந்தாரை ஏமாற்றி பணம் பிடுங்கிக் கொண்டு மேன்மேலும் கடன் வாங்கச் செய்து அவருடைய ஜெமீனை அபகரிக்க உத்தேசமில்லையா? இதில் இருவரும் பங்காளிகள் இல்லையா? உன் ஜாகையில் நீயும் ஸகாரமும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசித் தீர்மானம் செய்தது யாருக்கும் தெரியாதா?

பீம : (முகம் மாற்) இதெல்லாம் முழுப் பொய். கட்டுக் கதை. கலியாணபுரம் ஜெமீந்தாரையாவது ஏமாற்றுவதாவது! அவருக்கு யார் கடன் கொடுப்பார்கள்? என்றான். அந்தச் சமயத்தில் மெத்தைப் படியில் நின்று கொண்டிருந்த மோகனராவ், ஸகாராம்ராவை முன்னால் தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்து அவனைச் சுவரோரமாக நிற்க வைக்க, அவன் அஞ்சி நடுநடுங்கிய வண்ணம், பொறியில் அகப்பட்ட எலியைப்போல் விழித்துக் கொண்டு நின்றான். அதைக் கண்ட கிருஷ்ணவேணி மல்லிகா, பீமராவ் ஆகிய மூவரும் திடுக்கிட்டுத் திகைத்து நின்றனர்.

தம : (ஸகாராமைப் பார்த்து) ஸகாராம் ராயரே! இதோ நிற்கிறாரே இந்தப் பெரிய மனிதருக்கு நீர் யார் என்பது தெரியாதாமே! அது உண்மைதானா?

ஸகா : (அச்சத்தோடு ) ஓகோ அப்படியா! இவனைச் சிறு குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்த்து பெரியவனாக்கினது நான்தானே. அநாதையாகக் குப்பைத் தொட்டியில் இவனுடைய பெற்றோர் இவனைத் திருட்டுத்தனமாகப் போட்டு விட்டார்கள். நான் எடுத்து வளர்த்தேன். அடே பீமா! இனி மறைப்பதில் பயனில்லை; உண்மையை இவர்கள் அறிந்து கொண்டார்கள். நம்முடைய ரகசியங்களை எல்லாம் இவர்கள் நன்றாக அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/236&oldid=1234024" இலிருந்து மீள்விக்கப்பட்டது