பக்கம்:வசந்த மல்லிகா.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

வஸந்தமல்லிகா

பீம : (விழித்து) இவர்கள் எல்லோரும் என்னைக் கெடுக்க வேண்டும் என்று ஒரே கட்டுப்பாடாக வந்திருக்கிறார்கள். இனி இங்கிருக்க எனக்குப் பிடிக்கவில்லை. ஸஞ்சலாக்ஷி! என்னோடு வா! நாம் போவோம். விவரத்தையெல்லாம் நான் உனக்கு என் வீட்டில் தெரிவிக்கிறேன். இல்லாவிட்டால் இவர்களை உடனே வீட்டை விட்டு வெளிப்படுத்து - என்றான்.

அதைக் கேட்ட மல்லிகா எதையும் சொல்ல மாட்டாதவளாய்த் தத்தளித்து பின்வாங்கினாள். அவளுக்குத் தன்னோடு பேசவும் விருப்பம் இல்லை என்றறிந்த பீமராவ் அவளை மனைவியாக அடைவோம் என்னும் நம்பிக்கையை முற்றிலும் துறந்தவனாய் மெத்தைப் படியை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தான். அதைக் கண்- தமயந்தி, "மோசக்காரன் போகி றான்; விட வேண்டாம்; விட வேண்டாம்" என்று மோகனராவைத் தூண்ட, அவர் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவனது கையைப் பிடித்துக் கொண்டு , "பீமா! எங்கே போகிறாய்? சாஸனத்தை கொடுத்து விட்டுப் போ!” என்று அதட்டிக் கூறினார்.

பீம : முட்டாள்! சாஸனமா வேண்டும்? அது இனி உன் கண்ணில் படுவதேது; அதை நான் கொளுத்தி விட்டேன். என்னை விட்டு விடு - என்று திமிறினான். அந்த மொழியைக் கேட்ட மோகனராவ், பெரிதும் விசனமடைந்தார். அவன் தம்மை அவமரியாதையாகப் பேசியதைக் கூட அவர் கவனிக்கவில்லை . சாஸனம் போய் விட்டதைப் பற்றியே வருந்தி, அவனைப் பிடித்த பிடியையும் தளர விட்டார். மற்றவரும் சிறிது ஏங்கி நின்றனர். பீமராவ் தான் அவர்களை வென்று விட்டதைப் பற்றி தற்பெருமையும் அகம்பாவமும் கொண்டவனாய், "நீங்கள் சொல்வதற்கு நான் கட்டுப்பட்டிருப்பேன்; உண்மையையும் சொல்லியிருப்பேன். நீங்கள் இவ்வளவு தூரம் செய்தபடியால், சாஸனத்தைக் கொளுத்தி விட்டேன்" என்று சொல்லிக் கொண்டே தனது மடியில் இருந்த ஒரு காகிதச் சுருளை எடுத்து அருகில் இருந்த பெரிய விளக்கில் பிடித்துத் திருப்பித் திருப்பி நாலைந்து இடங்களில் அதைக் கொளுத்திக் கீழே போட்டு விட்டான்.

"அதோ காகிதத்தைக் கொளுத்துகிறான்" என்று கிருஷ்ண வேணி கூச்சலிட, மோகனராவ், அதை அவிக்க ஓடினார். பீமராவ் குறுக்கே விழுந்த வழிமறித்து பலமாக அவரைப் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/238&oldid=1234028" இலிருந்து மீள்விக்கப்பட்டது