பக்கம்:வசந்த மல்லிகா.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகத்தை வென்ற வஞ்சி

221

கொள்ள, அடுத்த நிமிஷத்தில் காகிதம் முழுவதும் எரிந்து சாம்பலாய் விட்டது. அதன் பிறகு பீமராவ் அவரை விட்டான்.

மோக : (கோபத்தோடு) அடே கொலை பாதகா! நீ செய்த காரியம் இன்னதென்பதை அறிந்து கொண்டாயா? அடே துரோகி! நீ எவ்வளவோ ஆசையோடு கலியாணம் செய்து கொள்ள நினைத்த இந்த மல்லிகாவின் ஐசுவரியத்தை எல்லாம் போக்கடித்தாயே! படுபாவி! துன்மார்க்கா! உன் தலையில் இடி விழுந்து விடும் - என்று நிரம்பவும் பதறிக் கூறினார்.

பீம : (தனது வெற்றியினால் சந்தோஷமடைந்து) ஆகா! நான் இவளிடம் எவ்வளவு பிரியம் வைத்தேன். அவ்வளவையும் போக்கடித்துக் கொண்டாள். என்னைக் கடைசி வரையில் நம்பியிருந்தால் பவானியம்மாள்புரத்து எஜமாட்டியாக்கி இருப்பேன். உங்களுடைய பேச்சைக் கேட்டு என்னை இவள் எப்போது வெறுத்தாளோ, அப்போதே இவளுக்கும் கேடு வந்து விட்டது. எல்லாவற்றையும் இவள் இழந்தாள் - என்று ஆத்திர மாகவும் அகங்காரமாகவும் கூறி மல்லிகாவை ஒரு பார்வை பார்த்தபின் தமயந்தியை நோக்கி, "தமயந்தி மகா புத்திசாலி! ஆனால் நிரம்பவும் அவசரப்பட்டு விட்டாள். அடீ தமயந்தி! இவ்வளவு சாமர்த்தியமாக எல்லோரையும் அழைத்து வந்தும் உன் சிநேகிதையான மல்லிகாவை ஜெமீந்தாரியாக்க உன்னால் முடியவில்லையே! நீ மல்லிகாவுக்கு செய்த இந்த நன்மையை அவள் இனி மறக்கவே மாட்டாள்" என்று கூறி ஏளனம் செய்தான்.

அதைக் கேட்ட எல்லோரும் திகைப்பும் வியப்பும் அடைந்து விசனத்தோடு மௌனமாக நின்றனர்.

பீம : ஜெமீந்தார்வாள்! தாங்கள் இவ்வளவு சிரமப்பட்டு இங்கே வந்தும் காரியம் பலிக்காமல் போய்விட்டது. நான் உத்தரவு பெற்றுக் கொள்கிறேன். தங்களுக்கு நிரம்பவும் சிரமம் கொடுத்தேன் - என்று ஏளனமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட, மல்லிகா, "போகட்டும் விட்டு விடுங்கள்" என்று ரகசியமாகத் தெரிவித்தாள்.

மோக : (உரக்க) இல்லை இல்லை . இவன் போகக் கூடாது; இவன் செய்த குற்றத்துக்கு இவனைப் போலீசார் வசம் இப்போதே ஒப்புவிக்கிறேன். என்னுடைய வீட்டிலிருந்த சாசனத்தைத் திருடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/239&oldid=1234029" இலிருந்து மீள்விக்கப்பட்டது